பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அதனால்தானோ என்னவோ, பிற்காலத்தில் ஒரு வகையில் சித்தனாகவே வாழ்ந்து மறைந்த பாகவதர் தம்முடைய சங்கீத அப்பியாசத்துக்கு ஏற்ற இடமாக அந்த சுவாமிகளின் மடத்தையே கொண்டார். அதற்குப் பின்... பொழுது விடிவதற்கு முன்னால் தியாகராஜன் அந்த மடத்துக்குப் போய்விடுவான். எதிர்த்தாற்போல் இருந்த உய்யக்கொண்டான் ஆற்றில் இறங்கி, தொண்டைவரை தண்ணிரில் மூழ்கி நின்று கணிரென்று பாடுவான். இப்படி விடியும்வரை பாடிய பின் வீட்டுக்கு வருவான். கண்ணாடிக்கு முன்னால் நின்று பாடி, தான் பாடும்போது தன்னுடைய முகம் அஷ்டகோணலாகக் காட்சியளிக்காமல் இருக்கிறதா என்று கவனிப்பான். ஆம், அழகு தன்னுடைய சங்கீதத்தில் மட்டும் இருந்தால் போதாது; 'பாடும்போது அது தன்முகத்திலும் இருக்கவேண்டும் என்று அவன் நினைத்தான். நியாயந்தானே? சிலர் பாடும்போது அவர்களுடைய முகம் போகிற போக்கைப் பார்த்தால், ஐயோ பாவம், இவர் ஏன் நமக்காக இவ்வளவு சிரமப்படவேண்டும்? நிறுத்திக் கொள்ளுங்கள் ஐயா, நாங்கள் எழுந்து போய்விடுகிறோம்!" என்று நமக்கே சில சமயம் சொல்லத் தோன்றுகிறதல்லவா? கண்ணாடி அப்பியாசத்துக்குப் பின் காலைச் சிற்றுண்டியை அருந்திவிட்டுக் கிராமபோனை எடுத்து வைத்துக் கொள்வான் தியாகராஜன். அதில் திரு. கிட்டப்பாவின் ரிகார்டுகளைப் போட்டுக் கேட்டுக்கொண்டே இருப்பான். 'அன்றொரு நாள் குட்டி அருஞ்சிறையில் இட்டேன் நான் என்ற பாடலைக் கேட்கும்போதுஅடாடா, மன்னன் எப்படிப் பாடுகிறான்' என்று தனக்குத்தானே வியந்து கொள்வான். மகாராஜபுரம் விசுவநாதய்யர் கச்சேரி எங்கேயாவது நடக்கிறதென்று தெரிந்தால் போதும்; எந்த வேலையாயிருந் தாலும் அதை ஒத்திப் போட்டுவிட்டு அவருடைய கச்சேரியைக் கேட்க போய்விடுவான்.