பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன்? ஒன்றும் புரியவில்லை மாணிக்கத்தம்மாளுக்கு; 'அந்தப் பானையில் நாம் அவனுக்குப் பிடித்த அரிசி முறுக்கோ, அதிரசமோ கூடச் செய்து வைக்கவில்லையே? இவன் ஏன் அதற்குள் தலையை விட்டு விட்டு இப்படி அவதிப்படுகிறான்? என்று எண்ணி வியந்து கொண்டே அவனை நோக்கி ஓடினாள். சொப்பன வாழ்வில் மகிழ்ந்து... தாயார் மாணிக்கத்தம்மாள் தன்னை நெருங்கு வதற்குள் பானைக்குள்ளே இருந்த தலையை எப்படியோ விடுவித்துக் கொண்ட தியாகராஜன், 'என்ன, அம்மா பயந்து விட்டாயா?" என்றான் சிரித்துக்கொண்டே. நல்லகூத்துத்தான், போ அப்படி என்ன இருந்தது அந்தப் பானையில்? ஏன் அதற்குள் தலையை விட்டாய்?" என்றாள் தாயார்; முகவாய்க் கட்டையின் மேல் கையை வைத்து. 'பானைக்குள்ளே ஒன்றுமில்லை, அம்மா அதற்குள் தலையை விட்டுக் கொண்டு பாடினால் தொனி நன்றாயிருக்குமாம்!' என்னவோ, போ இத்தனை கஷ்டப்பட்டுச் சாதகம் செய்கிறாய்; பலன் எப்படி இருக்கிறதோ, என்னவோ?’ "அதைப் பற்றிக் கவலைப்பட நாம் யார்? பகவான் இருக்கிறார்'என்றான் பையன். 'கீதாசாரியன்கூட அப்படித் தான் சொல்லியிருக் கிறான். அவன் அருளால் உன் சங்கீதம் சிறக்கவேண்டும்; உன்னுடைய முயற்சியில் நீ வெற்றி காணவேண்டும்' என்று தனக்கு எதிர்த்தாற் போல் இருந்த கிருஷ்ண பரமாத்மாவின் படத்தைப் பார்த்துக் கைகூப்பினாள் அவள். மாணிக்கத்தம்மாளின் பிரார்த்தனைக்குக் கிருஷ்ண பரமாத்மா செவிசாய்த்தாரோ இல்லையோ, திரு கோவிந்