பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 றானே' என்றார். அவனுடைய தோற்றம் அவ்வளவுதூரம் அவருடைய சிந்தையைக் கவர்ந்தது. அடுத்தாற்போல் தம்மைக் கண்டதும் கூனிக்குறுகி உட்கார்ந்த தட்சிணா மூர்த்தி ஆச்சாரியை நோக்கி, ஏண்டாப்பா, தட்சணாமூர்த்தி நீ வாசிக்கிறாயா? இல்லை, நானே வாசிக்கட்டுமா?" என்றார், அவரிடம் இருந்த மிருதங்கத்தைத் தம் பக்கமாக நகர்த்திக் கொள்ள முயன்று கொண்டே. ‘'வேண்டாங்க, நானே வாசிக்கிறேனுங்க!' என்றார் அவர் அதற்கு இடம் கொடாமல். 'அப்போநான்கஞ்சிராவை எடுத்துக் கொள்கிறேன்' என்று பிள்ளையவர்கள் கஞ்சிராவை எடுத்துக் கொண்டார். 'இந்தக் கச்சேரிக்கு நீங்கள் வருவீர்கள் என்று நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை; பையன் கொடுத்து வைத்தவன்' என்று உணர்ச்சி மேலிடக் கூறிக்கொண்டே பொன்னுவய்யங்கார் பிடிலை எடுத்துக்கொண்டார். 'நீரும் கொடுத்து வைத்தவர்தான்; இல்லா விட்டால் இவனுக்கு முதல் குரு என்ற பெருமை உங்களுக்குக் கிடைத்திருக்குமா?"என்றார் பிள்ளையவர்கள். தம்புரா சுருதி கூட்ட, கச்சேரி ஜம்'மென்று ஆரம்ப மாயிற்று. மைக் இல்லைதான். அதனால் என்ன? பையன் எடுக்கும்போதே நாலறைக் கட்டை சுருதியில் அல்லவா பாடுகிறான். கூட்டத்தில் ஒரு சத்தமில்லை; ஒரே நிசப்தம். 'ஆகா!' “ஆகாகா' 'அற்புதம்' 'அபாரம்!” "பையன் சாகித்தியத்தை மட்டும் கவனித்துப் பாட வில்லை; அந்தச் சாகித்தியத்தை இயற்றும்போது சாகித்திய