பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 திறக்கும் நேரத்தில் நிரூபித்துவிட்டாயே போ, போய் ஒரு பக்கமாக உட்கார். இன்னொருமுறை டேபிள் பே'னில் கையை வைத்து, முருகனுக்கு அனாவசியமாகத் தொந்தரவு கொடுக்க வைத்துவிடாதே என்றார் பிள்ளையவர்கள். சிறுவன் வெட்கித் தலை குனிந்து ஒரு பக்கமாகப் போய் உட்கார்ந்தான். அதற்குமேல் அன்றையக் கச்சேரியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழவில்லை; எல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்தது. திரு. தட்சிணாமூர்த்தி பிள்ளையவர்கள் கடைசியாகச் சொன்னார். கர்நாடக சங்கீத உலகத்துக்கு முருகன் அளித்திருக்கும் வரப்பிரசாதம் தியாகராஜன். இவனால் தமிழிசை வளரும்; வாழும். அவற்றுடன் இவனும் வாழ்வான். இவன் வாழும் போது தன் பெட்டியைக்கூடத் தங்கச்சாவி கொண்டு திறப்பான் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை' ஆம், பிற்காலத்தில் அவன் தன் பெட்டியைத் தங்கச்சாவிகொண்டு திறந்தானோ இல்லையோ, சென்னை மயிலையில் உள்ள கபாலி டாக்கீசைத் தங்கச் சாவிக் கொண்டு திறந்து வைத்தான். ஆக, ஏதோ ஒரு விதத்தில் பிள்ளையவர்களின் வாக்கு பலித்தது. அதற்குப்பின் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கச்சேரிகள், பாராட்டுரைகள்... அவற்றால் பெருமையும் புகழும் தான் வந்து குவிந்தனவே தவிர, பணம்வந்து குவியவில்லை. குவியாவிட்டால் போகட்டும்; கஷ்டமில்லாமல் காலம் தள்ளவாவது முடிந்ததா என்றால், அதுவும் இல்லை. 'கலை கலைக்காகவே' என்று கொஞ்சம் வசதி யுள்ளவர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொண்டிருக்க