பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 லாம்; வசதியில்லாதவர்கள், 'கலை கலைக்காக மட்டுமல்ல; ஒரளவு காசுக்காகவும்தான்' என்று தானே சொல்ல வேண்டியிருக்கிறது? ஆகவே, சங்கீத உலகத்தோடு நாடக உலகத்தையும் சேர்த்துக்கொண்டால் என்ன? என்ற எண்ணம் தியாக ராஜனின் உள்ளத்தில் எழுந்தது. அதன் பயனாக முதலில் ஒரிரு நாடகங்களையாவது நடத்தக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். அதற்காக அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த நடராஜ வாத்தியார் என்பவரை அவன் நெருங்கினான். அந்த நாளில் அபூர்வமாக பி. ஏ. வரை படித்திருந்த அவர் 'குடியரசு, 'திராவிடன், ! 'தமிழரசு போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல; ஞானகுமாரி நளின சிங்காரி போன்ற பிரபலப் பாடல்கள் அவரால் இயற்றப் பட்டவைதாம். சர்வ லட்சணங்களும் பொருத்தியிருந்த தியாக ராஜனைக் கண்டதும் அவர், 'இயல் இசை, நாடகம் ஆக முத்தமிழ்க் கலா வித்வ சிரோண்மணியாக விளங்க வேண்டியவன் நீ. உன்னைத் தேடி நானே வரவேண்டு மென்று இருந்தேன்; அதற்குள் நீயே என்னைத் தேடி வந்துவிட்டாய். வா உட்கார். இனி நீ வெறும் தியாகராஜன் இல்லை; தியாகராஜபாகவதர்'என்று அன்றே அவனுக்குப் பாகவதர் பட்டத்தைச்சூட்டி, அவனை அன்புடன் இன்முகம் காட்டி வரவேற்றார். எதிர்பாராத இந்த வரவேற்பு தியாக ராஜனின் இதயத்தை இன்பத்தால் நிறைத்தது. தனக்கு வேண்டிய நாடகங்களை அவரிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்ட தோடு அவன் நிற்கவில்லை; தன் வாழ்நாள் முழுவதும் அவரையே தன்னுடைய உற்ற தோழனாகவும் கொண்டார். நாடகம் எழுதிவிட்டால் போதுமா? அதை நடத்து வதற்கு வேண்டிய பயிற்சி தர வேண்டாமா? அதற்காக அந்த நாளில் அக்கலையிலே தேர்ச்சி பெற்றிருந்த திரு.நரசிம்மய்யங்கார் என்பவரைப்பிடித்தார்கள். புகழ்