பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அன்றே இப்படிச் சொன்ன பாகவதரை அப்போது சூசையாப்பிள்ளை மட்டுமே புரிந்துகொள்ளவில்லை? இப்போதும் இந்த உலகம் கூடத்தான் புரிந்துகொள்ள வில்லை! சத்வகுண போதன்... பழம் பெரும் நடிகைகளான ரத்னாபாய், சரஸ்வதி பாய், ரமணி.பாய் போன்றோர் மெல்ல மெல்ல நாடக மேடைக்கு வந்து கொண்டிருந்த காலம் அது. அந்தக் காலத்தை அனுசரித்து, அதுவரை தம்முடன் பெண் வேடம் தாங்கி நடித்து வந்த ஆண்களை வேறு வேடங்கள் தாங்க விட்டுவிட்டு ஒரு பெண்ணையே பெண்ணாக நடிக்கத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார் பாகவதர். அந்தப் பெண்ணின் பெயர் கமலா. வெறுங்கமலா இல்லை; குரங்குக் கமலா 'அதென்ன, குரங்குக் கமலா? பார்ப்பதற்கு குரங்கு போல் இருப்பாரோ என்று எண்ணிவிடாதீர்கள். அவர் என்னவோ அழகாய்த்தான் இருப்பாராம்; அவருடைய சேட்டைகள்தான் கொஞ்சம் குரங்குச்சேட்டைகளாக இருக்குமாம். அதனால் அவருடைய பெயருடன் அந்தப் பட்டப் பெயரும் ஒட்டிக் கொண்டுவிட்டது. ஆரம்பத்தில் அது அவருக்கு வெறுப்பைத் தந்தாலும், பின்னால் அதுவே அவர் விரும்பும் சிறப்புப் பெயராகிவிட்டது. ஆனாலும் பாகவதர் அவரைச் சும்மா விட்டாரா? அதுதான் இல்லை. எங்கேயாவது ஒரு குரங்கைக் கண்டால், 'குரங்கு, குரங்கு'என்பார்; 'என்னையா கூப்பிட்டீர்கள்?" என்று கமலா கேட்டால், 'இல்லை; அதோ பார், அந்தக் குரங்கைச் சொன்னேன்' என்பார் "ஆமாம், போங்கள்' என்று அவள் ஊடினால், ஆண்களைவிட பெண்கள் ஒரு விதத்தில் உயர்ந்தவர்கள், அது எந்த விதத்தில் என்று