பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 ஊருக்கு வந்து பார்த்தால் கோல்டன் கம்பெனி கோவிந்தசாமி வந்து பாகவதருக்காகக் காத்துக் கொண்டிருந்தார். 'யார் இந்தக் கோல்டன் கம்பெனி கோவிந்தசாமி?" என்கிறீர்களா? - இவர் அந்த நாளில் பிரபல நாடகக் காண்ட் ராக்டராயிருந்தவர். பிரசித்தி பெற்ற கோல்டன் கம்பெனி சாரதாம்பாள் என்ற நடிகை இவருடைய மனைவிதான். அவரைப் பார்த்ததும், "என்ன விஷயம்?' என்றார் பாகவதர். “நல்ல விஷயந்தான்' என்றார் அவர். சொல்லுங்கள்?" 'டி.கே.சண்முகம் பாய்ஸ் கம்பெனியை உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ?” 'தெரியும். ' 'ஒரு வருட ஒப்பந்தத்தில் அவர்களை நான் பொன்னமராவதிக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேன்." 'தொடர்ந்து நாடகம் போடத்தானே?" 'ஆமாம்; ஆனால் வசூல்தான் ஆகமாட்டேன் என்கிறது' 'ஏன், அவர்கள் நன்றாக நடிப்பார்களே?" 'அவர்கள் என்னவோ நன்றாகத்தான் நடிக்கிறார்கள்; ஜனங்கள் தான் பார்க்கமாட்டோம் என்கிறார்களே' காரணம் ' 'நடிப்பை விடப் பாட்டைத்தான் இப்போது ஜனங்கள் அதிகமாக விரும்புகிறார்கள். ' 'அதற்காக?' 'நீங்கள் வந்து ஒரு 'ஸ்பெஷல் நாடகம்' போட்டுத் தரவேண்டும். '