பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அதன் பலன்?... கழுகாசலக் காட்சியுடன் அன்று நாடகம் ஆரம்ப மாகிறது. சாட்சாத் முருகனைப் போலவே பாகவதர் மேடையில் தோன்றுகிறார். அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் வழக்கம்போல் தங்கள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர். இந்த பக்தி நீடிக்கவில்லை; அடுத்தாற்போல் தினைப்புலக் காட்சி வருகிறது. வள்ளி ஆலோலம்' என்று குரல் காட்டித் தினைப்புலத்துக்கு வரும் காக்கை குருவிகளைக் கவண்கல்லால் அடித்து விரட்டிக் கொண்டிருக் கிறாள். நாரதரின் பேச்சைக் கேட்டு வேடன் உருவில் வந்து நின்ற வேலன் அவள் அழகில் சொக்கி, அவளிடம் தன் காதலைப் பல வழிகளில் வெளியிடுகிறான். அவள் மசிய வில்லை. அதனால் தாபம் மிஞ்சிய வேடன், 'உன்மனம் இரும்போ, கல்லோ, பாறையோ?" என்று பாடுகிறான். பாட்டின்படி, பாறையோ? என்பதோடு முதல் அடி நிற்கவேண்டும். ஆனால் நிற்கவில்லை; மேலும் வளருகிறது. எப்படி?... 'உன்மனம் கல்லோ, இரும்போ, பாறையோ, குட்டிச்சுவரோ9' அவ்வளவுதான்; கதாநாயகன் கதாநாயகியைப் பார்த்துக் 'குட்டிச்சுவரோ என்று குறும்புத் தனமாகக் கேட்டுவிட்டானோ இல்லையோ, கூட்டத்தில் ஒரே கலகலப்பு 'ஆஹாஹா' 'த்சொத்சொt' 'ஹியர், ஹியர்' 'ஒன்ஸ்மோர், ஒன்ஸ்மோர்!" இப்படி நாலா பக்கங்களிலிருந்தும் கூக்குரல்கள். எப்படி இருக்கும் எஸ்.டி.எஸ்.லாக்கு? ஒரே வெட்கமாய்ப் போய்