பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அந்த அடியை விட்டுவிட்டு அடுத்த அடிக்குப் போய்விடுகிறார். ரசிகர்களுக்கு இதில் ஏமாற்றம் தான் என்றாலும் அன்றைய நாடகம் எப்படியோ ஒரு வழியாக நடந்து முடிந்துவிடுகிறது. அடுத்தநாடகம் விருதுநகரில் அதே ஜோடி, அதே நாடகம. எம்.கே. டி. யும், எஸ். டி. எஸ். ஸும் கேரளத்தில் சண்டையிட்டுக் கொண்டது போல் இங்கேயும் சண்டை யிட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்து ரசிகர் படை திரண்டு வந்திருக்கிறது. அவர்கள் எதிர்பார்த்தது வீண் போக வில்லை; தினைப்புலக் காட்சி வந்ததும் பாகவதர், 'உன்மனம் கல்லோ, இரும்போ, பாறையோ, குட்டிச் சுவரோ?' என்று வழக்கம்போல் ஆரம்பிக்கிறார். இம்முறை எஸ்.டி.எஸ். அதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கவில்லை; 'குட்டிச்சுவரைத் தேடி எதுவரும், தெரியுமா? என்று 'வெடுக் கென்று கேட்டு விடுகிறார். பாகவதரோ தம்மை மறந்து, "கழுதை!' என்று சொல்லி விடுகிறார். அவ்வளவுதான்; கூட்டத்தில் ஒரே ஆரவாரம், கையொலி! ரசிகர்கள் அனைவரும் பாகவதரைக் கைவிட்டு விட்டு எஸ். டி. எஸ். ஸுக்கு 'சபாஷ் போட ஆரம்பித்து விடுகின்றனர். அதற்காக எம்.கே.டி வருந்தவில்லை. ஒரு பெண்ணிடம் அதிலும் ஓர் அழகான பெண்ணிடம் அசட்டுத் தனமாக நடந்து அகப்பட்டுக் கொண்டுவிட்டால் வருந்தக் கூடிய வயதா அவருடைய வயது? சிரிக்கிறார்; குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறார். ரசிகர்களும் அவருடன் சேர்ந்து சிரித்துவிடுகிறார்கள்.