பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.கே.டி. பாகவதர் கதை எழிலிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் திரையும் வாழ்வும் சராசரங்கள் வரும் சுழன்றே! ஐம்பது நாட்கள் ஒடும் படத்தை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள்; நூறு நாட்கள் ஒட்டப்படும் படத்தையும் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள்.ஆயிரம் நாட்கள் ஒரே தியேட்டரில், ஒரே மூச்சில், யாரும் ஒட்டாமல் தானாகவே ஒடிய படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த அதிசயம் 1944-ம் ஆண்டு இந்தத் தமிழகத் திலே நிகழ்ந்தது. அதை நிகழ்த்திய படம் ஹரிதாஸ்'. அதில் நடித்தவர் தமக்குப் பின்னால் தம்மைப் போல் என்று சொல்ல வேறு யாரையுமே விட்டுச் செல்லாத திரையுலகச் சக்கரவர்த்தி திரு எம்.கே தியாகராஜ பாகவதர். '1944-க்கு முன்னாலும் அப்படி ஒரு படம் ஒடியதில்லை. அதற்குப் பின்னாலும் ஒடப் போவதில்லை' என்ற பெயரையும் பெருமையையும் நிரந்தரமாகவே பெற்றுவிட்ட அந்தப் படம் சென்னை பிராட்வே டாக்கீஸில் ஒடிக் கொண்டிருக்கிறது. மக்கள் அந்தப் படத்தில் பாகவதர் பாடியுள்ள பாடல்களை மட்டும் அப்போது வீதிக்கு வீதி பாடிக்கொண்டிருக்கவில்லை; அதற்கு முன்னால் அவர் பல படங்களில் பாடியுள்ள பாடல்களையும் அப்படியே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.