பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 'கோவலன், 'பவளக்கொடி' ஆக மூன்று நாடகங்கள் தொடர்ந்து நடக்கவிருந்தன. இந்தக் காலத்து நாடக மென்றால் மூன்று மணி நேரத்தோடு முடிந்துவிடும். அந்தக்காலத்து நாடகமோ அப்படி முடிந்து விடுவதில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆரம்பித்தால் விடிய விடிய அது நடக்கும். அந்த வழக்கத்தையொட்டி முதல் நாள் நாடகம் நடந்து முடிந்தது. இரண்டாவது நாள் இரவு நடக்கவிருந்த நாடகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பாகவதர் தாம் தங்கியிருந்த விடுதியில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கையில் பையுடன் யாரோ ஒருவர் அந்த விடுதியைத்தேடி வந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த திருமதி எஸ்.டி.சுப்புலட்சுமி, 'யார் நீங்கள்?' என்று அவரை விசாரித்தார். 'எனக்குக் கும்பகோணம்; பாகவதரைப் பார்க்க வந்திருக்கிறேன்' என்றார் அவர். “எதற்கு 9' 'அதை அவரிடம்தான் சொல்லவேண்டும். ' 'அப்படியா? நேற்று இரவில் இருந்து அவருடைய நாடகம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இன்று இரவும் நாடகம் நடக்கவிருக்கிறது. அவர் இப்போது தான் கொஞ்சம் ஒய்வு எடுக்கப்போனார்...' 'எடுக்கட்டும்; அவர் எழுந்திருக்கும் வரை நான் காத்திருக்கிறேன். ' 'மகிழ்ச்சி, உட்காருங்கள்' என்று அவரை வெளியே உட்கார வைத்துவிட்டு எஸ்.டி. எஸ். உள்ளே போனார். சிறிது நேரத்துக்கெல்லாம் வெளியே வந்த பாக வதரைக் கண்டதும், 'வணக்கம்' என்றார் வந்தவர், சட்டென்று எழுந்து நின்று.