பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கோயமுத்துர் நாடகத்துக்கு முதல்நாள்; அப்பா வுக்கு தெரியாமலாவது அந்த நாடகங்களை எப்படியாவது வாத்தியாருக்காக நடத்திக் கொடுத்து விடவேண்டுமென்று நினைத்த பாகவதர், "இனி கோயமுத்துர் நாடகத்திலிருந்து நான் தப்ப வேண்டுமானால் எனக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது; நான் தேவ கோட்டைக்குப் போய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன்' என்று தம் தந்தையிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டார். அங்கிருந்து கோயமுத்துருக்குப் போய் விடுவோம் என்ற அவருடைய தீர்மானமும் அவருடைய அப்பாவுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. 'திருட்டுப் பயலே, என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்?" என்று வெஞ்சினம் கொண்ட அவர் , பாகவதரை தொடர்ந்து தேவகோட்டைக்குப் போனார். அங்கே தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தடித்து, 'நான் உங்களுக்கு மகனும் இல்லை; நீங்கள் எனக்குத் தந்தையும் இல்லை' என்று பாகவதர் சொல்லும் அளவுக்கு வந்து நின்றது. முடிவு?... பாகவதரின் நண்பர்கள் அவருடைய தந்தையாரைப் பலவந்தமாகப் பிடித்து ஒரு காரில் ஏற்றித் திருச்சிக்கு அனுப்ப வேண்டியதாயிற்று! அதற்குப் பின்னாவது பாகவதரின் கோயமுத்துரர் பயணம் நின்றதா என்றால் அதுதான் இல்லை; தொடர்ந்தது. இரவு மணி ஏழு இருக்கும்; பாகவதரின் கார் திருச்சியைக் கடந்து பத்தாவது மைலில் போய்க் கொண்டிருந்தது. டமார்!... இப்படி ஒரு வெடிச்சத்தம் கேட்டதும் காரை நிறுத்தி 'என்ன? என்று கீழே குனிந்து பார்த்தார்கள் பாகவதரின் நண்பர்கள்.