பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அம்மையப்பா உனதன்பை மறந்தேன் ! ... தமிழ் நாட்டில் மட்டுமல்ல; கடல் கடந்த நாடுகளிலும் பாகவதரின் புகழ் வெகுவேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலம் அது. அந்தக்காலத்தில் அவர் ஒரு முறை இலங்கைக்குப்போய் வந்தாலும் போய் வந்தார் - சிங்கப்பூர், மலேஷியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலெல்லாமிருந்துகூட அவருக்கு அழைப்புக்கு மேல் அழைப்பாக வந்து கொண்டிருந்தது. அப்படி வந்த அழைப்பு களில் இலங்கையிலிருந்து இரண்டாவது முறையாக வந்த அழைப்பு குறிப்பிடத்தக்கதாகும். காரணம், அந்த அழைப்பு பாகவதருக்கு அளவு கடந்த பெருமையை மட்டும் தேடிக்கொடுக்கவில்லை; அளவு கடந்த சோகத்தையும் தேடிக் கொடுத்துவிட்டதுதான். திரு. ஒன்னுக்கோன் என்பவரை இங்கே உள்ள வர்கள் ஒரு வேளை அறியாவிட்டாலும், இலங்கையில் உள்ளவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். பிரபல நாடகக் காண்ட்ராக்டரான அவருடைய அழைப்பை ஏற்றுத்தான் பாகவதர் இரண்டாவது முறையாக இலங்கைக்குப் போயிருந்தார். இம்முறை அவருடைய குழுவுடன் நடராஜ வாத்தியார் செல்லவில்லை; தந்தை கிருஷ்ணமூர்த்தி சென்றிருந்தார். சென்ற இடமெல்லாம் சிறந்த வரவேற்பு. கூட்டம் கொட்டகைகளுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியேயும் நிரம்பி வழிந்தது. வசூலுக்கு எந்த இடத்திலும் குறை வில்லை. தங்க மெடல்களும், நற்சான்றிதழ்களும் வந்து குவிந்தவண்ணம் இருந்தன. இவற்றையெல்லாம் பார்த்த கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார். அந்தச் சமயத்தில் இந்த உலகமே அவருக்குத் துச்சமாகப் பட்டது. இனி தமக்கும் தம்முடைய குடும்பத்துக்கும் ஒரு குறைவுமில்லை; தம் மகனால் தாமும் நிமிர்ந்து நிற்கலாம்; தம்முடைய குடும்பமும் நிமிர்ந்து நிற்கும்' என்ற தைரியம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.