பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ரயில் பெட்டியிலிருந்து சவப்பெட்டியை இறக்கி யதும், 'இதை இப்படியே இடுகாட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விடுவதுதான் நல்லது!’ என்றார் அவர்களைச் சேர்ந்த ஒரு பெரியவர். 'அதற்கா இவ்வளவு தூரம் கொண்டுவந்தேன்? என்று நினைத்த பாகவதர், 'ஏன்' என்றார். 'வெளியே இறந்தவரை மீண்டும் உள்ளே எடுத்துச் செல்வது நல்லதல்ல'என்றார் அவர். 'அப்படியா?" என்று ஒருகணம் யோசித்த பாகவதர், மறுகணம் உற்ற நண்பர் ஒருவரை நோக்கி, 'முதலில் நீங்கள் இந்தச்சவப்பெட்டியைத் திறந்து இதற்குள் அப்பாவின் சடலம் இருக்கிறதா என்று பாருங்கள்'என்றார். காலியாயிருந்தால் பெரியவர் சொல்வது போல் இடுகாட்டுக்கே எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்பது அவருடைய எண்ணம்! ஆனால் பெட்டியைத் திறந்ததும்... - பூரீமான் கிருஷ்ணமூர்த்தி பைஜாமா, ஷேர்வாணி எல்லாம் அணிந்து, என்றுமில்லாத அழகுடன் காட்சி அளித்துக் கொண்டிருந்தார். அவ்வளவுதான் 'அப்பாவை வீட்டுக்குக் கொண்டு போகத்தான் வேண்டும்' என்றார் பாகவதர். ‘'வேண்டாம், அவர் கெட்டாலும் மற்றவர்கள் நன்றாயிருக்கவேண்டும்; அவரை வீட்டுக்குக் கொண்டு போகவே வேண்டாம்!” என்றார் பெரியவர். “என்ன சாஸ்திரமோ, என்னவோ! எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போலிருக்கும் பெரியம்மாவின் வீட்டுக்காவது கொண்டு போகலாம், இல்லையா?” 'அதற்கு உங்கள் பெரியம்மா சம்மதிக்க வேண்டாமா? '