பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 0 முருகுசுந்தரம் என்ன செய்கிறாய்? யாரது?

(பார்வை முடிச்சிட துஷ்யந்தனும் சகுந்தலையும் அசைவற்று நிற்கின்றனர். பரதன் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறான்). துஷ்யந்தன்:

சகுந்தலை.! சகுந்தலை:

ஓ! பெளரவப் பேரரசரா வரவேண்டும்! உங்கள் காலடிபட இந்த ஏழைக்குடில் என்ன புண்ணியம் செய்ததோ? துஷ்யந்தன்

சகுந்தலை என்னை மன்னிப்பாயா?

சகுந்தலை:

மன்னிக்கலாம்! என் வசந்தம் ஐந்தாண்டுகள் வறட்சியில் கழிந்தது. நான்ஊமைக் குயிலாகவே குரலொடுங்கி வாழ்ந்தேன். பிறர்ஏளனப் பனிப் பார்வை பட்டு என் பெண்மையின் இளைய தளிர்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. தன்தந்தையைப் பற்றிக் கேட்கும்