பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

எல்லாம் தமிழ்



 களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
 வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
 பொருபடை தருஉம் கொற்றமும் உழுபடை
 ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே :
 மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
 இயற்கை அல்லன செயற்கையில்
தோன்றினும்
 காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம் ;
 அதுநற் கறிந்தனை யாயின், நீயும்
 நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
 பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
 குடிபுறத் தருகுவை யாயின்,
 அடிபுற ந் தருவர் அடங்கா தோரே.

இதன் உரையில், 'முறைவேண்டு பொழுதிற் பதனெளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றோரென்ற கருத்து, நீயும் பதனெளியை யாதல் வேண்டும், அவ்வாறு பெயல் பெறுதற் கென்றவாறாம்' என்றுள்ள பகுதியும் இந்தக் கதைக்குப் பயன்பட்டது.

கலக்கமும் தெளிவும் :

இதற்கு ஆதாரமான புறநானுற்றுப் பாடல்வருமாறு :

 வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
 தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
 குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
 குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்
 கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டில்
 நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
 ஆனிலை உலகத் தானும் ஆனாது
 உருவும் புகழு மாகி விரிசீர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/102&oldid=1530038" இலிருந்து மீள்விக்கப்பட்டது