பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் இட்ட சாபம்

3

பட்டாள்; ஆனுல் அந்த வேகத்தில் கிளர்ச்சி இல்லை மலர்ச்சி இல்லை. யாரோ பிடித்து உந்த அதை மீற முடியாமல் செல்பவளைப் போலவே அவள் நடந்தாள். தாய்சொல்வது காதில் விழுந்தும் விடை சொல்லாமலே போனுள், .

ஆற்றங்கரையை வந்து அடைந்தாள். ஆறு அவளிடம் பேச முடிந்திருந்தால், ”திரும்பிப் போ” என்று சொல்லியிருக்கும். நாள்தோறும் வந்து தன்னோடு கலந்து பழகும் அந்த மங்கையிடம் ஆற்றுக்கு அன்பு இருப்பது இயற்கை. ஆற்றிலே இறங்கிவிட்டால் மற்றவர்களைப் போலவா அவள் குளிப்பாள்? நீரரமங்கையைப் போலக் குதித்து நீந்திக் களித்து விளையாடுவாள். அவளுடைய விளையாட்டுக்கு இடமாகவும் துணையாகவும் இருக்கும் ஆற்றுக்கு அவள் அழகும் பெருமையும் நன்றாகத் தெரியும்.

இன்று ஆறு களிக்கவில்லை. அவள் மெல்லத் துறையினுள் இறங்கினாள். நீரில் காலை வைத்தவுடன் திடுக்கிட்டு வைத்த காலை எடுத்தாள்; ஒன்றும் இல்லை; ஏதோ ஒரு சிறு குச்சி அங்கே ஒதுங்கியிருந்தது. ஏதோ நினைப்பாக இறங்கினவள் அது காலில் பட்டவுடன் திடுக்கிட்டுப்போனாள். ஒருகால் ஆறுதான் வேறு வழி இல்லாமல் இப்படி எச்சரிக்கை செய்ததோ என்னவோ! தன்னை அச்சுறுத்தியது ஒரு சிறு குச்சி என்பதை அவள் அறிந்தவுடன் தனக்குள் சிரித்துக் கொண்டாள். அதை எடுத்து வீசி எறிந்தாள்.

நீராடப் புகுந்தாள். ஆடையைக் கசக்கி உடம்பைத் தேய்த்து நீராடினாள். நீருள் அமிழ்ந்தும் தாவியும் குதித்தும் விளையாடினாள் சிறிது ஆற்றின் வேகத்திலே மிதந்துபோய் எழுந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/11&oldid=1473820" இலிருந்து மீள்விக்கப்பட்டது