பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் இட்ட சாபம்

9

 வீசினான். "இதோ அவளை அழைத்துக் கொண்டு காவலாளரே வந்துவிட்டார்கள்" என்ற பதில்தான் கிடைத்தது. -

ஈர ஆடையுடன் வந்தாள் அவள். நெஞ்சில் ஈர மில்லாத காவலரைத் தொடர்ந்து வந்து நின்றாள். "இவளா காவல்மரத்தின் பெருமையைக் குலைத்தவள்?" என்று கண் சிவக்க, மீசை துடிக்க, உறுமினான் அரசன்.

"ஆம். இவள்தான் அந்தக் காயைத் தின்றாள்." "தின்றாளா? நஞ்சைத் தின்பதும் அதைத் தின்பதும் ஒன்று என்பதை இந்தப் பேதை அறியவில் லையோ? இவள் எப்படி அதைப் பறித்தாள்?'

யாரோ ஒருவன் அதைக் களவு செய்துகொண்டு வந்து கொடுத்திருக்கிறான். அதைப் பெற்று ஆற்றங் கரையிலே தின்றுகொண்டிருந்தாள்.'

"அப்படித்தானா ?” என்று நன்னன் அவளைப் பார்த்துக் கேட்டான். - - அவள் உடம்பில் ஒரு நடுக்கம் உண்டாயிற்று. ஈர ஆடையை நெடு நேரமாக உடுத்தியிருந்ததால் அல்ல; கேட்ட வார்த்தைகளை அப்படியே நம்பும் அந்தக் கொடிய அரசனது கேள்வி அவளை உலுக்கியது.

“அரசே, ஆற்றில் நீராடினேன்; மிதந்து வந்த காயை எடுத்துத் தின்றேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” என்று மெல்லிய குரலில் அவள் மொழிந் தாள்.

அது எப்படி மிதந்து வரும்? காற்றா அடித்தது ? குரங்கு பறித்துப் போட்டதா? மரத்தில் நேற்றுவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/17&oldid=1528930" இலிருந்து மீள்விக்கப்பட்டது