பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சோறு அளித்த சேரன்

"எங்கிருந்து வருகிறீர்கள்?"

"தமிழ்நாட்டிலிருந்து.'

"அப்படியா? மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் படைக்கும் கெளரவர் படைக்கும் குறைவில்லாமல் உணவு கொடுத்த தமிழ்நாட்டிலிருந்தா?””

"ஆம்."

“உங்கள் அரசன் மகா தாதாவாக இருக்கிறானே !”

“அவன் பரம்பரையே அப்படித்தான்.”

"உதியஞ் சேரலாதன் என்ற பெயரை நாங்கள் அறிவோம். ஆனால் அவன் இயல்பு ஒன்றும் எங்களுக்குத் தெரியாது.”

“அவன் எல்லாக் குணங்களிலும் சிறந்தவன்.”

இவ்வாறு பேசிக்கொள்பவர்களில் ஒருவர் தமிழ் நாட்டார். மற்றொருவர் வடநாட்டார். தமிழ்நாட்டில் உள்ள முரஞ்சியூர் என்ற ஊரிலே பிறந்த நாகராயர் என்ற புலவர் வடநாட்டு யாத்திரை செய்யலானார். புலவர்களிலே சிறந்தவர்களுக்கு அரசர்கள் முடியணியும் சிறப்பை வழங்குவார்கள். அந்தச் சிறப்பைப் பெற்றவர் நாகராயர் ஆதலின் அவரை முரஞ்சியூர் முடி நாகராயர் என்று தமிழ்நாட்டார் வழங்குவர்

பாரத யுத்தம் நடந்து முடிந்த காலம் அது. அந்தப் பெரும்போரில் குருக்ஷேத்திரத்தில் எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/26&oldid=1528959" இலிருந்து மீள்விக்கப்பட்டது