பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

எல்லாம் தமிழ்


பெற்றிருக்கிறார்கள். உண்மையிலே வணங்கா முடி பெற்ற வழுதியை வணங்கிய முடியினனாகச் சொல்வது பிழை ; பாவம் என்றே சொல்லவேண்டும். அப்படியிருக்க, காரிகிழார் என்ன காரணத்தால் இப்படி யெல்லாம் பேசுகிறார் ? அரசவையில் சமயமறிந்து பேசத் தெரியாதவர் அல்லவே இவர்!' -அவர்கள் சிந்தனை எப்படியெல்லாமோ ஓடியது.

காரிகிழார் அதோடு நிற்கவில்லை. "இம் மன்னர்பிரானது கண்ணி விளக்கம் பெறுவதாக என்று வாழ்த்துகிறார்கள் புலவர்கள். நான் அது வாடட்டும் என்று வாழ்த்துகிறேன்."

இடியோசை கேட்டதுபோல இருந்தது சிலருக்கு. என்ன அமங்கல வார்த்தை என்று செவி புதைத்தனர் சிலர். அரசன் ஒன்றுமே விளங்காமல் உட்கார்ந்திருந்தான். அமைச்சர் கண்கள் சிவந்தன.

"பெருவழுதியின் சினம் தாங்குவதற்கரியது என்று பேசுகிறோம். அது பகைவரைக் கருவறுப்பது, என்றும் தணியாதது என்று பாராட்டுகிறோம். அந்தச் சினம் மேற் செல்லமாட்டாமல் அடங்கட்டு மென்று நான் சொல்லுகிறேன்."

ஒரு பெரியவருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. "காரிகிழாரா இப்படியெல்லாம் பேசுகிறவர் ? இந்த வார்த்தைகளைக் கேட்ட செவிகளைக் கங்கை நீரால் கழுவினாலும் தீராது. சொன்ன நாவைப்பற்றி என்ன சொல்வது?" என்று பொருமினர்.

காரிகிழார் அஞ்சவில்லை. நடுங்கவில்லை. புன் னகை பூத்தார். அந்தப் பெரியவரைப் பார்த்தார். 'உங்கள் கோபம் நியாயந்தான். ஆனல் நான் இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/48&oldid=1529290" இலிருந்து மீள்விக்கப்பட்டது