பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

எல்லாம் தமிழ்


அறிவீர்கள். திருக் கோயிலை வலம் செய்யும் வழக்க முடைய பெருவழுதி அங்கே குடை பிடித்துக் கொண்டா செல்கிறார்? அவருடைய பக்திக்கு இழுக்கல்லவா அது? முக்கட்செல்வர் திருக்கோயிலில் இவர் குடை பணிகிறதை நாம் பார்ப்பதில்லையா? அங்கே மடங்கும் குடை எங்கும் நிமிர்ந்து நிற்கிறது. ஆகவே, முக்கட் செல்வர் நகர் வலஞ்செயற்கு நின் குடை பணிக என்று நான் வாழ்த்துவதில் ஏதாவது தவறு உண்டா? சொல்லுங்கள்."

சபையினர் ஆனந்தத்தால் ஆரவாரம் செய்தார்கள். "காரிகிழாரா தவறு செய்பவர்?" என்று பேசிக் கொண்டார்கள். .

“வேள்வி பலவற்றைச் செய்யும் அந்தணரிடம் இப் பெருமானுக்கு உள்ள மதிப்பை நாம் அறிவோம். பிற இடங்களில் வணங்காத இப் பிரான் முடி, நான் மறை முனிவர் ஆசி கூறி ஏந்திய கைக்கு எதிரே இறைஞ்சுக என்று வாழ்த்துவது தவறாகுமா ? அந்த வணக்கந்தானே பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதியென்ற சிறப்பை நம் மன்னர் பிரான் பெறும் படியாக வைத்தது ?" -

"புலவர் சாமர்த்தியமே சாமர்த்தியம் !" என்று அமைச்சர் ஒருவர் சொல்லிக் கொண்டார்.

"நம் மன்னர் மாலை வாடட்டும் என்றேன். எப் போது என்று நீங்கள் யோசிக்கவில்லை. பகை மன்னருடைய நாடுகளைச் சூறையாடிச் சுடும்போது அந்தப் புகை வீசுவதனால் அது வாடட்டும் என்கிறேன். வேண்டாம் என்று சொல்ல உங்களுக்குத் தைரியம் உண்டா ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/50&oldid=1529292" இலிருந்து மீள்விக்கப்பட்டது