பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

எல்லாம் தமிழ்


கள். சேர நாட்டு யானைகளை நானே பார்த்தேன்" என்றான் ஒற்றன்.

"இருக்கட்டும் ; அதனால் என்ன? மணி ஒலிக்கும் பெரிய யானைகளும் தேரும் குதிரையும் படைக்கலங்களையுடைய மற்றவர்களும் இருக்கிருர்களென்று அவர்களுக்குச் செருக்கு உண்டாகியிருக்கிறது. பகையுணர்ச்சி மூண்ட உள்ளத்தில் நிதானம் இராது. என்னுடைய படைப் பலத்தை அவர்கள் கருதவில்லை. அதனை நினைந்து அஞ்சாமல், சினம் மிகுந்து சின்னத் தனமான வார்த்தைகளைச் சொல்லித் திரிகிறார்கள். கிடக்கட்டும். அதற்குப் பதில் சொல்லிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை."

அரசன் யோசனையில் ஆழ்ந்தான். படைத் தலைவரையும், மந்திரிமாரையும் வருவித்தான். ஆலோசனை செய்தான். " போர் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். நம்முடைய நாட்டின் எல்லைக்குள்ளே அவர்கள் வருவதற்குமுன் நாம் எதிர்சென்று போராட வேண்டும்" என்று நெடுஞ்செழியன் வீரம் ததும்பக் கூறினான். படைத் தலைவர் உடம்பட்டார். மந்திரிமார் பின்னும் யோசனை செய்தனர்.

" இனி யோசனைக்கு நேரம் இல்லை. சிறு சொல் சொல்லிய வேந்தரைச் சிதையும்படி அருஞ்சமத்தில் தாக்கி அவர்களை அவர்களுடைய முரசத்தோடு ஒருங்கே சிறைப்படுத்துவதாக உறுதி கொண்டு விட்டேன். அப்படிச் செய்யாவிட்டால்,--இதோ ஆணையிடுகிறேன், கேளுங்கள். அவர்களைச் சிறை செய்யாவிட்டால், என்னுடைய குடை நிழலில் வாழ்பவர் யாவரும் புகலிடம் காணாமல் வருந்தி, எம் அரசன் கொடுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/54&oldid=1529384" இலிருந்து மீள்விக்கப்பட்டது