பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரும் நீரும்

51

 அவரிடம் அமைச்சர்கள் தம் கருத்தைக் கூறி, "எப்படியேனும் நீங்கள் மனம் வைத்து அரசரை வழிக்குக் கொண்டுவரவேண்டும் " என்று வேண்டிக்கொண்டார்கள். "என்னால் இயன்றதைச் செய்வேன்" என்று அவர் உடம்பட்டார்.

4

"தலையாலங்கானத்துச் செருவைப்பற்றி இன்று உலகத்தில் பாராட்டாத புலவர்களே இல்லை" என்றார் குடபுலவியனார்.

"ஆம். பெரிய போர்தான். நான் பட்டத்துக்கு வந்தவுடன் முதல் வேலை இந்தப் போரில் வெற்றி பெறுவதாகி விட்டது " என்றான் நெடுஞ்செழியன்.

"எல்லாம் உங்கள் குலத்தின் பெருமை. நாவலந் தீவு முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆண்ட உரவோர் பாண்டிய மன்னர். அவர்களுடைய மரபில் வந்த அரசர்பிரான் கோடி கோடி ஆண்டுகள் வாழ வேண்டும்."

" அவர்கள் பெருமையே பெருமை பாண்டி நாட்டின் பெருமை வேறு எந்த நாட்டுக்கு இருக்கிறது ? மதுரை மாநகரின் சிறப்பை வேறு எங்கே பார்க்க முடியும்? பகையரசர் என்னதான் முயன்றாலும் இந்த நகருக்குள்ளே புக முடியுமா ?"

" ஆழமான அகழியையும் உயரமான மதில்களையும் பெரியோர்கள் அமைத்திருக்கிறார்கள். இத்தகைய வளம் பெற்ற பழைய நகரம் வேறு எங்கும் இல்லை என்பது உண்மை. இந்த நகரில் வாழ்ந்த அரசர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/59&oldid=1529393" இலிருந்து மீள்விக்கப்பட்டது