பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

எல்லாம் தமிழ்


களெல்லாம் இம்மை மறுமைப் பயன்களைக் குறைவின்றிப் பெற்றவர்கள் , வீரத்திலே சிறந்தவர்கள். அதனால் புகழைப் பெற்றவர்கள்."

" அவர்கள் சென்ற நெறியிலே நானும் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்."

" அப்படியே ஆகட்டும். புண்ணியமும் வெற்றி யும் புகழும் ஒருங்கே கிடைப்பதற்கு மூல காரணம் ஒன்று உண்டு. அதனை உடையவர்கள் மறுமையுலகத்துச் செல்வமும், அரசரை வென்று நிற்கும் திறனும், நல்லிசையும் பெறுவார்கள்."

"படைப் பலத்தையா சொல்கிறீர்கள் ?”

"அல்ல, அல்ல. யானை முதலிய படைகள் அல்ல; வேருெரு படை உழுபடை, படைகளுக்கெல்லாம் உணவளிக்காவிட்டால் அவை போரிட முடியுமா ? உடம்பிலே உயிர் தங்கி இருக்கும்படி செய்தாலல்லவா போரிட முடியும் ?"

" நான் படை வீரர்களுக்கு வேண்டிய உணவைக் கொடுத்தேன். அவர்களுக்கு இனியும் குறைவின்றிக் கொடுக்கக் கட்டளை பிறப்பித்திருக்கிறேன்."

" நல்ல காரியந்தான். உண்டி கொடுத்தவரே உயிர் கொடுத்தவ ராகிறார்கள். உணவு இல்லா விட்டால் உடலும் இல்லை. ஆனால் அந்த உணவு எப்படி வருகிறது? அது தானே கிடைத்துவிடாது. நிலமும் நீரும் சேர்ந்தால் உணவு கிடைக்கும் ; உணவுப் பொருள் விளையும். அந்த இரண்டையும் சேர்ப்பவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள் ஆகிறார்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/60&oldid=1529395" இலிருந்து மீள்விக்கப்பட்டது