பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயின் பிரார்த்தனை

59

 போல் இல்லறச் செயல்களில் ஈடுபட்டு விடுவாள். இரவெல்லாம் பெண்மையின் குழைவும் பகலெல்லாம் கற்பின் திண்மையும் அவளிடத்திலே ஒளி வீசின. " என்ன ஆச்சரியம்! அவனுடைய பிழையை நினையாதவள் போலவே இருக்கிறாளே இவளுடைய பொறுமை யாருக்கு வரும்? தயையே இந்த உருவம். இவள் உலகத்துப் பெண்களில் ஒருத்தி அல்ல; பொறுமையின் உருவாகும் தெய்வம்; அடித்தாலும் அணைத்தாலும் அன்பு செய்யும் தாய். இவளை நாங்கள் உடன் பயிலும் தோழியாக நினைப்பது தவறு. எவ்வளவு அறிவு பெற்றாலும் இத்தகைய பொறுமையும் மன வலிமையும் வருவது அரிது. இவள் பிராயத்தால் சிறியவளேனும் அறிவினுல் முதியவள் ; பெரியவள் ; எமக்குத் தாய் ; இல்லறத்தின் சிறப்பை உணர நிற்பார்க்கெல்லாம் தாய் !" என்று தோழிமாரும் பிறரும் பேசிக்கொண்டனர்.

இற்பிறப்பு என்பது ஒன்றும், இரும்பொறை என்பது ஒன்றும், கற்பெனும் பெயரது ஒன்றும் அவள்பால் களிநடம் புரியக் கண்ட அவர்கள், அவ்வாறு எண்ணியது வியப்பன்று. தன்னையும் மறந்து, தன் தலைவன் பிழையைப் பிறர் அறியாதவாறு காத்து, அறப்பெருஞ் செல்வியாக விளங்கினாள் அவள்.

3

தோழிமார் உள்ளம் வெந்து உருகியது. மனத்தலைவி தன் துயரைப் புறத்தார். அறியாதபடி மறைத்தாள். தோழியருடன் கலகலப்பாகப் பேசுவதும், புன்னகை பூப்பதும், நல்லுரை கூறுவதுமாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/67&oldid=1529432" இலிருந்து மீள்விக்கப்பட்டது