பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயின் பிரார்த்தனை

61

 "முதலை வாழ்கிறது என்றவுடன் எனக்கு நினைவு வருகிறது. அந்த முதலே குழுகுவாரைப் பிடித்து அழுத்திவிடும் என்கிறார்கள். யானையானாலும் அதன் வாய்க்குள் போக வேண்டியதுதான் என்று சொல்லுகிறார்களே ! உண்மையா?"

"ஆம், உண்மைதான். யானையும் மனிதர்களும் வந்தால் இழுப்பது கிடக்கட்டும். அதைப் பெரிய கொடுமை என்று சொல்லமாட்டேன். அது தன்னுடன் ஒருங்கு வாழும் பெரிய மீன்களை யெல்லாம் விழுங்கி விடும்."

கேட்டவள், "அப்படியா ! இந்த ஊர்த் தலைவன் இயல்புக்குச் சமமான இயல்பு அதற்கு இருக்கிறது போலும் முதலைப் போத்து முழுமீன் ஆகும் தண்துறை ஊரன் இவன். அந்த முதலையைப்போல இவனும் தன்னுடன் பழகியவர்களுடைய உயிர் தேய ஒழுகுகிறான் " என்று சற்று வேகமாகச் சொன்னாள்.

மற்றொருத்தி உடனே பேச்சை நிறுத்தினாள். தலைவியின் இயல்புக்கு மாறாக அந்தப் பேச்சு ஓடிவிட்டதை அவள் உணர்ந்தாள். மேலே அந்தத் தோரணையில் பேச்சை வளர்க்க விரும்பவில்லை : " கடவுளை நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்; நம் தலைவிக்கு இன்பம் உண்டாகும்படி வாழ்த்தவேண்டும்" என்று தொடர்ந்து பேசினாள்.

அவளுக்கு இன்பம் உண்டாகவேண்டுமானல் பழையபடி தலைவனும் தலைவியும் சேர்ந்து முறையாக அறம் புரிய வேண்டும். அவனே அங்கு இருக்கிறான். இவளோ இங்கிருக்கிறாள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/69&oldid=1529443" இலிருந்து மீள்விக்கப்பட்டது