பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

எல்லாம் தமிழ்


" இருந்தால் என்ன ? இங்கிருந்து போனவன் அவன்தான். அவன் போன தேரும் அங்கு இருக்கிறது. அந்தத் தேர் முன்பெல்லாம் பகலில் எங்கே போனாலும் மாலையில் வீட்டு வாசலில் வந்து நிற்கும். மறுபடியும் அந்தக் காட்சியைக் கண்டு நம் கண் குளிர வேண்டும். கண்போமா ?" அவள் தொண்டை கரகரத்தது. கண்ணில் நீர் ததும்பியது.

இருவரும் சேர்ந்து தொழுதார்கள் ; வாழ்த்தினர்கள். " கடவுளே, தண்துறை ஊரன் தேர் எம் முன் கடை (வாசல்) நிற்க அருள் புரியவேண்டும்" என்று பிரார்த்தனை செய்தார்கள்.

4

மாலைக் காலம். இல்லத் தலைவியாகிய மட மங்கை விளக்கேற்றி வைத்தாள் ; தெய்வத்தை வணங்கித் தொழுதாள் ; வாழ்த்தினாள். தோழிமார் இருவரும் தூரத்தில் இருந்தபடியே அவளைக் கவனித்தார்கள். " நாம் கடவுளே வேண்டினோம். இவளும் வேண்டுகிறாள். இருசாராருடைய வேண்டுகோளும் கடவுள் காதில் ஏறாமற் போகுமா ?' என்று சொல்லிக் கொண்டே கவனித்தார்கள்.

அவள் வேண்டுகோள் என்ன ? அவர்கள் கூர்ந்து கேட்டார்கள். கடவுளே, என் தலைவன் மீண்டும் இங்கே வந்து விடவேண்டும் என்றுதான் அவள் வேண்டுவாளென்பது அவர்கள் எண்ணம். ஆளுல் அவள் வேண்டுகோள் வேறு விதமாக இருந்தது. தன்னலத்தின் நிழல் ஓர் அணுக்கூட அதில் இல்லை.

அவள் வேண்டுகோள் அவர்கள் காதிலே இப் போது தெளிவாக விழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/70&oldid=1529455" இலிருந்து மீள்விக்கப்பட்டது