பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் செய்த சோதனை

கொங்கு நாட்டிலிருந்து ஒரு புலவர் வந்திருக்கிறார், ஆணூரில் உள்ள சர்க்கரை என்ற வள்ளலின் அவைக்களப் புலவராம்" என்று அறிவித்தான் காவலன்.

"புலவரா! அவரை நான் அல்லவா எதிர் கொண்டு அழைக்கவேண்டும்?" என்று சொல்லிய படியே அந்தச் செல்வர் தம்முடைய வீட்டு வாசலுக்கே வந்து விட்டார்.

புலவரும் உபகாரியும் சந்தித்தார்கள். இருவரும் மாளிகையின் உள்ளே சென்றார்கள். செல்வர் புலவருக்கு உபசாரம் செய்து அமரச் செய்தார். இருவரும் உரையாடத் தொடங்கினர்.

தொண்டை நாட்டில் உள்ள செங்குன்றுர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த எல்லப்பர் என்னும் வள்ளல் அச் செல்வர். புலவர்களின் பெருமையை அறிந்து பாராட்டிப் பரிசளிக்கும் பெருந்தகை. தமிழ் நயந்தேரும் சதுரர். அவருடைய புகழ் தமிழ்நாடெங்கும் பரவியிருந்தது. வேறு ஊர்களில் உள்ள புலவர்கள் அவ்வப்போது அவரைத் தேடிக்கொண்டு வருவார்கள். அவருடன் பேசிப் பொழுது போக்குவதிலே இன்பம் காண்பார்கள். அவர் அளிக்கும் பரிசைப் பெற்று அளவற்ற மகிழ்ச்சியுடன் ஊர் செல்வார்கள். எப்போது பார்த்தாலும் புலவர்களைப் பராமரிப்பதும் தான தர்மம் செய்வதுமாகப் பொழுது போக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/79&oldid=1529515" இலிருந்து மீள்விக்கப்பட்டது