பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 தேசீய கீதத்தின் பொருள்

இந்தியாவின் சுகதுக்கங்களே நிர்ணயிக்கிற நீதான் மக்கள் எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிறுய்.

நின் திருநாமம், பஞ்சாப்பையும் சிந்துவையும் குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும் திராவிடத்தையும் ஒரிஸ்ஸாவையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

அது விந்திய ஹிமாசல மலைகளில் எதிரொலிக்கி்றது. யமுனே, கங்கை நதிகளின் இன்ப நாதத்தில் கலக்கிறது.

இந்தியக் கடல் அலைகளால் ஜபிக்கப்படுகிறது. அவை நின் ஆசியை வேண்டுகின்றன: நின் புகழைப் பாடுகின்றன.

இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/8&oldid=1472386" இலிருந்து மீள்விக்கப்பட்டது