பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

எல்லாம் தமிழ்


எல்லப்பரைப் புலவர்கள் சும்மா விட்டு வைப்பார்களா? நன்றியறிவு மீதுரக் கவிபாடி அவர் புகழை வளர்த்தார்கள். அவர்கள் பாடிய பாடல்கள் தமிழ்நாடெங்கணும் உலவிச் செங்குன்றுார் எல்லப்பருடைய வள்ளன்மையைத் தெரிவித்தன.

'ஆலமரம் இருக்கும் இடத்தில் பறவைகளைப் பார்க்கலாம். திருமால் இருக்கும் இடத்தில் திருமகளைக் காணலாம். எல்லப்பன் இருக்கும் இடத்தில் இரவலரைக் காணலாம்' என்று ஒரு புலவர் பாடினர்.

"ஆல்எங்கே அங்கே அரும்பறவை; ஆல்துயிலும்
மால் எங்கே அங்கே மலர்மடந்தை ;-சோலைதொறும்
செங்கே தகைமணக்கும் செங்குன்றை எல்லன்எங்கே
அங்கே இரவலர்எல் லாம்."

எல்லப்பரைப் போலவே தமிழருமை அறிந்து புலவரைப் போற்றிப் புகழ் பெற்றவராக விளங்கினர், ஆணூர்ச் சர்க்கரை என்ற உபகாரி. கொங்கு நாட்டில் மாடுகளுக்குப் பெயர் போன பழைய கோட்டை என்ற ஊர் இருக்கிறது. அதற்கு அருகில் இருப்பது ஆணூர். அவ்வூரில் இருந்தவர் சர்க்கரை. ஆணுார்ச் சர்க்கரையின் ஆதரவில் பல புலவர் தமிழ் வளர்த்தனர். அவர்களில் ஒருவரே தொண்டை நாட்டுக்குச் சென்று அங்குள்ள தமிழ்ப் பெருமக்களைக் கண்டு வரலாம் என்று புறப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் போற்றிப் புகழும் எல்லப்பரைக் காண்பதே முக்கியமான காரியமாக வைத்துக் கொண்டார். ஆணூர்ச் சர்க்கரையைப் போன்ற தர்மவானை எங்கும் காணமுடியாது என்பது அவர் கருத்து. சர்க்கரையின் தமிழ் ___________________________________________________

" மால்-மகா விஷ்ணு. கேதகை-தாழி)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/80&oldid=1529516" இலிருந்து மீள்விக்கப்பட்டது