பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் செய்த சோதனை

77

 கர்ணர்களைக் காணலாம். உங்களைத் தருமபுத்திரரென்றே நான் எண்ணுகிறேன் " என்று விம்மி விம்மி உருகிச் சொன்னார்.

கொங்குப் புலவர், " புலவரே, சர்க்கரையைக் குழந்தையாகப் பெற்ற அன்னைக்கு இன்று மற்றொரு குழந்தை கிடைத்தது ஆச்சரியம். அந்தக் குழந்தை அன்னைக்கு முன்னே அழுது நிற்பது அதைவிட ஆச்சரியம் !" என்று உணர்ச்சிப் பூரிப்பிலே பேசினர். புலவர் செய்த பைத்தியக்காரச் செயலைவிட வள்ளலின் உயர் குணத்தையே அங்குள்ளவர்களின் உள்ளங்கள் எண்ணி உருகின.

தொண்டை நாட்டுப் புலவர் சர்க்கரையின் பொறுமையை இப்போது அறிந்துகொண்டார். தமிழ்ப் புலவர்களிடம் அவருக்குள்ள அன்புக்கு எல்லை காண முடியாதென்பதைக் கண்கூடாகவே தெளிந்தார். பின்னும் சில நாட்கள் ஆணூரில் தங்கினர். அப்பால் சர்க்கரை தந்த பரிசில்களைப் பெற்று ஊருக்குத் திரும்பினர்.

3

வர் தம் ஊரை விட்டுப் புறப்பட்டபோது ஆத்திரத்தில், தம் உடன் இருந்தவர்களிடம் தம்முடைய எண்ணத்தை வெளியிட்டிருந்தார். சர்க்கரையைச் சோதிக்கச் செல்வதாகச் சொல்லி யிருந்தார். இந்தச் செய்தி எல்லப்பர் காதுக்கும் எட்டியது. ஆகவே புலவர்களும் எல்லப்பரும் அவருடைய வருகையை எதிர்நோக்கி யிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/85&oldid=1529525" இலிருந்து மீள்விக்கப்பட்டது