பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

எல்லாம் தமிழ்


துளிக்கின்றது. அந்தச் சின்னஞ் சிறு குழந்தையின் இளங் கையிலே சிக்குண்ட எதிர் காலத்தை நினைக்கையில் ஒன்றும் தெரியாமல் பெருமூச் செறிகிறாள்.

சேதுபதி மன்னருடைய ஆதரவு அவளுக்கு எப்போதும் போல இருக்கிறது. ஆனாலும் அந்த ஆதரவு இரக்கத்தின் விளைவாக எழுந்ததுதானே ? அவளுடைய கணவர் அமிர்த கவிராயர் வாழ்ந்த காலத்தில் அவள் பெற்ற இன்ப வாழ்வு என்ன ! இப்போது அவள் நிர்க்கதியாக நிற்கவில்லையே தவிர, நாள்தோறும் அமிர்த கவிராயருடைய அமுதக் கவியிலே உள்ளம் பறிகொடுத்த உற்சாகத்தில் சேதுபதி தந்த சம்மானங்களைப் பெற்று வாழ்ந்த வாழ்வு ஆகுமா ? .

அந்தக் காலம் இனிமேல் வருமா? ஒரு துறைக் கோவையென்று புலவர் உலகத்தில் பேச்சு வந்தால் அது ரகுநாத சேதுபதியின் ஒரு துறைக்கோவையைத் தானே இன்றும் குறிக்கிறது ? புலவர் ஆளுக்கோர் ஒரு துறைக்கோவை பாடினலும் இதற்குச் சமானம் ஆகுமா ?

அவள் நினைத்துப் பார்க்கிறாள். நானுறு பாட்டுக்கும், சேதுபதி மன்னர் நானூறு பொன் தேங்காயை உருட்டி விட்டாரே! இதைக் கதையிலே கூடக் கேட்டதில்லையே ! இடையே ஒரு பாட்டைச் சொல்லும் போது, " இதை நன்றாக உடைத்துப் பார்த்து ரசிக்க வேண்டும் ; மற்றப் பாட்டுக்களைப் போல எண்ணக் கூடாது" என்று கவிராயர் சொன்னார். சுவையறியும் செம்மலாகிய அரசர் சொன்னதுதான் மிக மிக ஆச்சரியம். "தெரியும் ; நமக்கு இதன் அருமை தெரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/88&oldid=1529805" இலிருந்து மீள்விக்கப்பட்டது