பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரதேசியின் உபாயம்

89



     கொட்டைகட்டி மானேஜர்
           செங்கடுவாய் வந்தபின்பு
      சுத்தவட்டை ஆனதென்ன
           சொல்லாய் குருபரனே!

என்று பாட்டு வந்தது. அங்கிருந்த அத்தனை பேரும் அதைக் கவனித்தார்கள். அதிகாரி நன்றாகக் கேட்டார். மானேஜர் முதலில் கவனிக்கவில்லை. பரதேசி அழுத்தமாகச் சொற்களை உச்சரித்துத் திருப்பித் திருப்பிப் பாடினார். பாட்டில் மானேஜர் என்ற வார்த்தை வேறு வந்தது. ஆகவே அவரும் கவனித்தார். -

      வேலவர்க்கு முன்னிற்கும்
           வீரவாகு தேவருக்குச்
       சாயரட்சைப் புட்டு
            தவிடோ குருபரனே !

என்று இரண்டாவது கண்ணி வந்தது. அடியார்கள் ஆச்சரியத்தில் மூழ்கி ஸ்தம்பித்து நின்றார்கள். மானேஜர் முகத்திலே கடுகு வெடித்தது. உடம்பெல்லாம் வேர்வை வெள்ளம். அதிகாரி, பரதேசியின் சாதுரியத்தை வியந்தபடி விஷயத்தை உணர்ந்து கொண்டார். பரதேசி அதோடு நின்றாரா ? மானேஜரின் அக் கிரமத்திற்குப் பெரிய சாட்சி, கோயில் யானைகள். உடம்பு மெலிந்துபோன அவற்றைப் பார்த்தால் உண்மை நன்றாக வெளியாகிவிடும். ஆனல் மானேஜர் அந்த இரண்டு யானைகளையும் அதிகாரியின் கண்ணில் படாதபடி எங்கோ அனுப்பிவிட்டார். வேறே கோயிலுக்குப் போயிருக்கின்றன என்று சாக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/97&oldid=1529824" இலிருந்து மீள்விக்கப்பட்டது