பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌

19


மக்களை, மிரட்டவும்‌ மயக்கவும்‌ எளிதாக முடிகிறது என்று தெரியும்போது, சீமான்கள்‌, குடிஅரசு முறையையே குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முடிகிறது.

நாம்‌ ஆட்சிப்‌ பொறுப்பிலே அமர்ந்து கொண்டு, அதற்கு விளக்கம்‌, இதற்குச்‌ சமாதானம்‌, இந்தக்‌ கணக்கு அந்த விவரம்‌, என்றெல்லாம்‌ காட்டிக்கொண்டும்‌, எதிர்ப்பாளர்‌களுடன்‌ மல்லுக்கு நின்று கொண்டும்‌, கஷ்டப்‌ படுவானேன்‌; நமது ‘பாகார்டு’ ஓட்ட நல்ல ஆளை அமர்த்திக்‌ கொள்வது போல நமது நலனைப்‌ பாதுகாக்கும்‌ முறையிலே ஆட்சி நடத்த, தக்கவர்களைத்‌ தட்டிக்கொடுத்து, வேலை வாங்கினால்‌ போதாதா!—என்ற முறையிலே தான்‌ கோடீஸ்வரர்கள்‌ உள்ளனர்‌.

ஐந்துகோடி ரூபாய்‌ செலவிட்டுத்தான்‌

போன பொதுத்தேர்தலில்‌ காங்கிரஸ்‌ கட்சி வெற்றி

பெற்றது என்பதைக்‌ காங்கிரஸ்‌ அமைச்சரே,
வெட்கமின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார்‌.

மக்கள்‌ ‘ஓட்‌’ அளிக்கிறார்கள்‌; சீமான்கள்‌ நோட்‌ அளிக்கிறார்கள்‌. ஓட்டளித்த மக்களுக்காக முற்போக்கான சட்டங்களை இயற்றுவோம்‌. நோட்‌ அளித்த சீமான்களுக்‌காக, அந்தச் சட்டத்திலே, நிறைய சந்துபொந்துகளை ஏற்படுத்திக்‌ கொடுப்போம்‌. திடலில்‌ தீவிரம்‌ பேசுவோம்‌—அது மக்களுக்குத்‌ தரும்‌ தித்திப்பு! மாளிகைகளிலே சீமான்களிடம்‌, வேண்டுகோள்‌ விடுப்போம்‌—அது இலட்சங்‌கள்‌ பெற!!

இந்த முறையில்‌ தானே தம்பி! காரியம்‌ நடக்கிறது.

மக்களே! உங்கள்‌ வாழ்வு வளம்‌ பெறப்‌ புதுப்புதுத்‌ தொழில்களை அமைக்கிறோம்‌ என்று திடலில்‌ பேசுகின்றனர்‌ மாளிகைக்காரரிடமோ,