பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌


தொழில்களை நடத்த, இன்னின்ன வசதிகள்‌, சலுகைகள்‌, வாய்ப்புகள்‌, தருகிறோம்‌. பெற்றுக்‌கொள்க என்று பேசுகின்றனர்‌.

ஐயன்மீர்‌! திட்டம்‌ திட்டம்‌ என்று பேசுகிறீர்‌, புதுப்‌புதுத்‌ தொழில்‌ வளர்ப்பதாகக்‌ கூறிக்‌ கொண்டு, முதலாளிகளைத்தானே கொழுக்க வைக்கிறீர்‌! என்று கேட்டு விட்டாலோ, மூக்குச்‌ சிவந்துவிடுகிறது அமைச்சர்களுக்கு. அப்படியானால்‌, தொழில்‌ வளர வேண்டாம்‌ என்கிறீரா! மக்கள்‌ வறுமையிலேயே வாடட்டும்‌ என்கிறீரா!—என்று பேசி, மக்கள்மீது மாயவலை வீசுகிறார்கள்‌.

தம்பி! ஒரு தகவல்‌ பார்த்தேன்‌, ஏதோ ஒரு இதழில்‌ தனிப்பட்ட முதலாளி, சுயராஜ்யத்திலே தன்‌ ஆதிக்கத்தை எந்த அளவு பெருக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது, என்பதற்கான தகவல்‌, திகைத்தே போனேன்‌. சொல்கிறேன்‌, கேட்கிறாயா, திகைப்படையாமல்‌, காங்கிரஸ்‌ கட்சிக்கு மெத்த வேண்டியவர்‌ அல்லவா, பிர்லா! அவருடைய மாளிகையில்தானே, காந்தியாரே சுட்டுக்கொல்லப்பட்டார்‌!! அவருடைய தர்மாலயங்கள்‌, என்னென்ன தெரியுமா! குமரி முதல்‌ இமயம்‌ வரை என்கிறார்கள்‌ அல்லவா—அது இவரைம்‌ பொறுத்த வரையிலே, முற்றிலும்‌, உண்மை.

ஹென்றி கெய்சர்‌ எனும்‌ அமெரிக்கக்‌ கோடீஸ்வரருடன்‌ கூட்டாகச்‌ சேர்ந்து, உத்திரப்பிரதேசத்தில்‌, மிகப்‌ பெரிய அலுமினியத்‌ தொழிற்சாலையைத்‌ துவக்கி இருக்கிறார்‌.

தம்பி! இங்கே ஏன்‌, தொழிற்சாலை அமைக்கக்‌ கூடாது என்று நாம்‌ கேட்கும்போது, படிக்காதமேதையும்‌ சேர்ந்து கொண்டே, பதில்‌ கூறுகின்றனர்‌, நினைவிலிருக்கிறதா—கண்ட கண்ட இடத்திலே தொழிற்சாலைகளை ஆரம்பித்து விடமுடியுமா!

தொழிலுக்குத்‌ தேவையான மூலப்பொருள்‌ கிடைக்கவேண்டாமா? மூலப்பொருள்‌ எங்கு கிடைக்‌கிறதோ அங்கு தொழில்‌ வளரும்‌. இதுகூடத்‌ தெரியவில்லை, இந்தத்‌ தி.மு.க, வுக்கு—என்று பேசிக்‌ கெக்கலி செய்‌கின்றனர்‌.