எல்லோரும் இந்நாட்டு மன்னர்
21
ஆனால், தம்பி! பிர்லா, அமெரிக்கக் கூட்டுடன் உத்தரப்பிரதேசத்தில் அமைக்கிறாரே, அலுமினியத் தொழிற்சாலை, அதற்கு மிகமிகத் தேவைப்படுவது பாக்சைட்! அந்தப் பாக்சைட் உத்தரப்பிரதேசத்தில் இல்லை. மத்திய பிரதேசத்திலிருந்து, 400கல் தொலைவிலே இருந்து, கொண்டுவரப்படவேண்டும் !!
இதைச் சொல்லிப் பார், காமராஜரிடம், “போ! போ!அலுமினியமாவது காரியமாவது! இங்கே வேண்டியது சோறு!” என்று அழகாக எந்த நாட்டு அமைச்சரும் இதுவரை சொல்லாத முறையில், கூறுவார்.
பிர்லாவின் தொழிற்சாலை, உத்தரப்பிரதேசத்தையும் மத்தியப் பிரதேசத்தையும் இணைக்கிறது.
- டெல்லியில், பிர்லா பஞ்சாலை!
- பம்பாயில், பிர்லாவுக்கு சென்ச்சரி நூற்பாலை.
- குவாலியரில், அவருக்கு, ஜீவாஜீராவ் பஞ்சாலை.
- கல்கத்தாவில், ஜெயஸ்ரீ கேசராம் பஞ்சாலை.
- மத்யபிரதேசத்தில், குவாலியர் பட்டுநூல் ஆலை.
- ஆமதாபாத்தில், புதிய சுவதேசி ஆலை.
- ஹைதராபாத்தில், சிர்சில்க் எனும் ஆலை.
பிர்லா சணலாலை, ராமேஸ்வர் சணலாலை, பாலி சணலாலை, சூரா சணலாலை, இத்தனையும் கல்கத்தாவில்,
ஜாம் நகரில், திக்விஜயா, கம்பளி ஆலை.
கல்கத்தாவில், நெசவாலையந்திர உற்பத்திச்சாலை.
கிம்கோ, என்ற பெயரில், குவாலியரில், பாரத்பூரில் தொழிற்சாலைகள்.
கல்கத்தாவில், புதிய இந்தியா, மேல் கங்கை, பாரத்பூர், அவுத், புது சுவதேசி, கோவிந்து, என்று இத்தனை பெயர்களில் சர்க்கரை ஆலைகள்.
பெப்பர்மின்டு தொழிற்சாலை, கல்கத்தாவில்.