பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 கசக்கிக் கட்டிக்கொள்ள ஊக்கின. நம் கடமை யுணர்ச்சியும் இந்தியப் பற்றும் புதிய பாரதத்தை வளர்க்கும் சுமையை ஏற்க, அதற்காகப் பத்தியம் இருக்க, தேவைகளைக் குறைக்க ஊக்குவதாக. கால்சட்டைகளையும் கைச்சட்டைகளையும் மேலும் மேலும் நாமே அடுக்கிக்கொண்டு போகும் போக்குப் போவதாக. பேஷனுக்காக புதுப்புது உடை மாற் றப்பித்து ஒழிவதாக r நகைப்பித்தும் குறைவதாக. ஒப்பிலாத பாரத சமுதாயத்தை-எல்லோருக் கும் நல்வாழ்வளிக்கும் பாரத சமுதாயத்தைமெலிந்தவர்களை வலியவர்கள் காக்கும் பாரத சமுதாயத்தை-வலிவும் வளமும் நிறைந்த சுதந்திர் பாரத சமுதாயத்தை வளர்க்க, உயர்ந்த நோக் கோடு, ஏற்ற போக்கோடு, உள்ள உறுதியோடு, கடமை உணர்வோடு, தியாக சிந்தையோடு, நாட்டுப் பற்ருேடு பாடுபட விழிமின், எழுமின், உழைமின்.