பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியாகம் செய்வோம் என்னருமைத் தம்பி, தங்காய்! வாழில் அனைவரும் வாழ்வோம்; விழில் அனைவரும் வீழ்வோம்’ என்ற சமதை நோக்கு உள்ளத்தில் ஊன்றிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சி. மனிதர்களை மனிதர்களாகவே மதிப்பதென்று முடிவு செய்வதை வரவேற்கிறேன். - நம் சமதை நோக்கு, வெறும் இலட்சியமாக நின்றுவிடக்கூடாது. என்ருே ஒரு நாள் யாரோ ஒருவர் எப்படியோ சமநிலையை உருவாக்கிவிடு வார். நாம் அதை உள்ளத்தால் உள்ளலே போதும்!’ என்று உட்கார்ந்துவிடக்கூடாது. அந் நிலையை நாமே உருவாக்க வேண்டும். நம் உழைப் பால் உருவாக்க வேண்டும். விரைவில் உருவாக்க வேண்டும். இல்லையேல், ஆறின கஞ்சி பழங்கஞ்சி யாக மாறிவிடும். சமதை என்பது பொருளற்ற, உயிரற்ற பகட்டுச் சொல்லாக ஊசிப்போகும். அந்த நிலைக்கு விடக்கூடாது. உடன் பிறந்தோரே! சமதை, நாட்டின் மூச்சாக, வாழ்க்கை முறையாக விரைவில் வர வேண்டும். அதற்கு ஆவன செய்ய, அவர் வரட்டும் இவர் வரட்டும் என்று காத்துக் கொண்டிருக்கா தீர்கள். நாம் ஒவ்வொருவரும் சமதையை வளர்க்க வ ரிந்து க ட் டி நிற்போமாக. சொல்லெல்லாம் அதற்கே சொல்வோம். தொண்டெல்லாம் அதற்கே காணிக்கையாக்குவோம். ஆதிக்கம் புரிவோர், சமதையென்றதும் துடி துடிப்பர், சூழ்ச்சிகள் பல செய்வர். இதுவே அவர்கள் கை முதல்; அவர்கள் முன்னேர் சொத்து. ஆதிக்கவாதிகள் தாமே சமதைவாதிகளாக மாறி விடுவார்கள் என்று கனவு கண்டு ஏமாறவேண்டாம். உயரத்திலே இருக்கிற மாங்காழ் தாகை நிலத்தில்