பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.7 துரக்கி எறிந்து விட்டு, தரித்திர நாராயணர்களின் தொல்லைகளையெல்லாம் தம்முடைய சுமையாக ஏற்றுக் கொள்ளாதிருந்தால், மகாத்மாவாகியிருட் பாரா? பாரதத்தை விடுவித்திருப்பாரா? காந்தியடிகளின் தியாகம், பல்லாயிரக்கனக் கானவர்களின் தியாகத்தைக் காட்டுத்தீ போல் வளர்த்தது. அவரது எளிமை செல்வரின் செருக்கை உறையிட்டு வைத்திருந்தது. அச் செருக்கு அழிவை எருவாக்கி ஒர் நிறை இந்தியனை உருவாக்குவதற்கு முன்னே குண்டுக்கு இரையாக்கிவிட்டோம். நாமும் காந்தியடிகளைப் போன்று பெரும் பெரும் தியாகங்களைச் செய்ய முடியாவிட்டாலும் நேருவைப் போன்று இலட்சியத்திற்காகச் சிறை) வாழ்வை நிறை வாழ்வாகப் பலமுறை ஏற்கக் துணியாவிட்டாலும், குமரனைப் போன்று உயிரைக் கொடுத்து இலட்சியக் கொடியைக் காக்காவிட் டாலும், அணில்களாக இருந்து நிலைக்கேற்ப சமதைத் தொண்டு புரிவோம் வாரீர் மானிட மலர்களே!