பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நல்லோர் நெஞ்சிலேகூட, தன்னலம் என்னும் அருகம்புல், அடுத்தடுத்து தளிர்த்து, ஊர்நல்ம், பொதுநலம், நாட்டுநலம் ஆகிய நற்பயிரைப் பாழாக்கும். ஆகவே, நாட்டுப் பற்ற்ை வளர்ப் பதற்கு வழி, தன்னலத்தைக் கல்லியெறிவதுதான். தை உணர்வோம். எல்லோருக்கும் உணர்த்து வோம் உடன்பிறந்தோரே! ஊருக்கு மட்டுமல்ல, நமக்கு நாமும் உணர்த்திக் கொள்வோம்! பலமுறை உணர்த்திக் கொள்வோம்! அன்ருடம் உணர்த்திக் கொள்வோம். 'தன்வீடும் தானும் என்பது மட்டுமா செதுக்கி ஒதுக்க வேண்டிய புல்? 'தன் சாதியும் தானும்: என்பதும் செதுக்தி ஒதுக்க வேண்டிய பூண்டே. இக் குழுப் பற்றும் இக் காலத்திற்கு ஆகாத பூண்ட்ே. தன்னலத்தை விடத் தீய சக்தி, தன் சாதி" உணர்ச்சி. இது நச்சுப் பூண்டு. இதையும் அடுத் தடுத்து முயன்று கத்தரித்து அல்லது தோண்டி யெடுத்து அழிக்காவிட்டால் இது புதராகிக் காடாகி நாட்டுப் பற்றையே, மக்கள் மாண்பையே அழித்து விடும். நாட்டுப் பற்றையும் மக்கள் மாண்பையும் வளர்க்க வேண்டியது நம் கடமை. நம் எல்ல்ோ ருடைய தலையாய கடமை. நாட்டுப் பற்றும், மக்கள் மாண்புணர்ச்சியும் காட்டுப் பயிரல்ல. நுட்பப் பயிர், மிகநுட்பப் பயிர். ஆகவே அதிக விழிப்போடும் கருத்தோடும், உழைப்போடும் பொறுப்போடும் இந்நுட்பப் பயிர்களை வளர்ப்போமாக நற்பயிர்களை வளர்ப்போமாக, இந் நற்பயிர்களுக்கு இடையூருக முளேக்கும் சாதிப்பூண்டை-நச்சுப்பூண்டை-ம்டி இசய்யாது அடுத்தடுத்து, ஆண்ம்ையோடு, அறி வோடு கிள்ளி எறிவோமாக செதுக்கி ஒதுக்கு வோமாக. அஞ்சாது அடுத்தடுத்து செதுக்கி