பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.21 காக்கும் வழிகளிலே ஒன்ரும். ஆகவே விழாவைச் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அச்சிட்ட அழைப்பிதழ், விருந்து இவை அம் முடிவின் விளைவு கள். இவற்றிற்குச் செலவு ஐந்நூறு ரூபாய் மட்டும். இன்றைய ஐந்நூறு அல்ல தங்காய், அன்றைய ஐந்நூறு ரூபாய். இது நினைவிலிருக்கட்டும். -- இச் செலவிற்குப் பணம் எங்கே? முந்தைய சொத்து உண்டா? இல்லை . . . . . . சேர்த்து வைத்தது உண்டா? இல்லவே இல்லை. கையூட்டை நம்பியா இத் திட்டம்? அதுவுங்கூட இல்லை. தாகைக் கொடுப்பவர்களிடமும் வாங்கி அறியாதவர் அவர், பின் எப்படிச் சமாளிப்பார்? கடன் வாங்கி சமாளிப் பார். அவரது நாணயத்தை நம்பித் தெரிந்தவர் ஒருவர் கடன் கொடுத்தார். ஐந்நூறு ரூபாயும் கடனே. இவ்வளவு கடன்பட்ட அவரது மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா? பதினைந்து ரூபாய். பதினைந்து ரூபாய்ச் சம்பளத்தில் இனி மிச்சம் பிடித்துத்தான் ஐந்நூறு ரூபாய்க் கடனை அடைக்க வேண்டும். இதற்குக் குறைவாகச் செலவு செய்தால் உலகம் துாற்றும். பழிவந்து சேரும். வழிவழி யாகப் பழி தொடரும். எனவே இவ்வளவு செலவு செய்யாம்ல் முடியாது. நான் விழாவிற்கு வந்து, சிறப்பு செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். எவ்வளவு சிறிய சம்பளத்தின் மேல் எவ்வளவு பெரிய கடன் வாங்குகிருர்! அதுவும் எவ்வளவு சிறிய நிகழ்ச்சிக்கு என்று வியப்படைகிறீர்களா உடன் பிறந்தோரே? நானும் அப்படியே எண்ணி னேன். என்னுள் சினமும் பொங்கிற்று. பொங்கி என்ன பயன்? நாமோ, ஒல்காப் புகழ் படைத்த தொல்பண்பினர். மரபைக் காக்கவே மூச்சை வைத்திருப்பவர். இங்கே புதியதைச் சொல்ல யாருண்டு? சொன்னலும் கேட்க ஆளுண்டா?