பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 இதோ! இப்படித் திருப்புங்கள் உங்கள் சிந்தனையை. எந்தச் சித்தராலே ஏக இந்தியாவை உருவாக்க முடிந்தது? ஞாயிறு மறையாத, பரந்த-பேரரசைச் சேர்ந்த ஆங்கிலேய ஆட்சி ஏக இந்தியாவை உருவாக்கிற்ரு: ஐந்நூற்றுச் சில்லறைச் சமஸ் தானங்களை விட்டுவைத்ததால் அல்லவா, அவர் களால் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்க முடிந்தது? பிறப்புச் சிறப்புடைய மன்னர் மன்னர்களால் ஆகாத பாரதம்-சிறுசிறு நாடுகளாகச் சிதறிக் கிடந்த பாரதம்-யாராலே ஒரே பாரதமாக உருவாகியது? முப்படை மிகுந்த உலகப் பேரரசால் உருவாக்க முடியாத இணைந்த பாரதம் எவராலே உருவாக்கப்பட்டது? சூரிய வம்சத்தாராலா? சந்திர வம்சத்தாராலா? இல்லை, இல்லை. சூரியவம்ச அரச பரம்பரையைச் சேராத ஒருவ ரால் உருவானது ஏக இந்தியா. சந்திரவம்ச அரச பரம்பரையைச் சேராத ஒருவரால் உருவானது ஏக இந்தியா. இந்தியா ஒன்றே. ஆட்சியும் ஒன்றே. குடிகளும் ஒன்றே என்ற தெளிவுடைய ஒருவரால் உருவானது ஏக இந்தியா. ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் என்னும் உலகியல் அறிந்து, வினையாற்றிய வல்லவ ரால் உருவானது இணைந்த பாரதம். இதனை இதனுல் இவன் முடிக்குமென் ருய்ந்து அதனை அவன் கண் விடல் வினைக்குரிமை நாட்டிய பின்றை அவனை அதற் குரியகைச் செயல்