பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 குக் குறுக்கே நிற்கும் சாதிப் பாகுபாடு உணர்ச்சி களை, பகுதிப் பாசங்களைத் துாக்கியெறிவதற்கு இதை விட் ஏற்றத் தருணம், சிறந்த தருணம் வாய்க்குமா? இந் நெருக்கடியில்-இன்றைய, அளவுகடந்த ஆர்வத் தில், குறுகிய பற்றுக்களைத் துறக்காமல் எப்போது துறப்பது? - = நல்லோர் பலர். இதந்தருமனையினிங்கி, இடர் மிகு சிறைப்பட்டுப் பெற்றுத்தந்த சுதந்திரத்திற்கு ஆபத்து வந்துள்ளது. கண்ணினுமினிய சுதந்திரத் திற்கு வந்துள்ள ஆபத்தை உணருங்கள். உணர்ந்திர் களா? நல்லது. மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத் தின் மாண்பினை இழப்போமா? மாட்டோம் என்று முழங்குவது கேட்கிறது. 'அம் முழக்கம் செயலாக மாறவேண்டாவா? வேண்டுமென்று ஒப்புக்கொள் கிருயா தம்பீ? நல்லது, தம்பி! இதோ செயல் திட்டம். ஒன்றுபடுவோம். சாதி நினைப்புகளைத் துறந்துவிட்டு ஒன்றுபடுவோம். பகுதிப் பாசங்களை அறுத்துவிட்டு ஒன்று படுவோம். நாம் எல்லோரும் இந்திய மன்னர் என்பதை அறிந்து ஒன்று படுவோம். - புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். * இது யாருக்கோ காட்டிய வழியா? நமக்குக் காட்டிய வழியல்லவா? இப் பொது மறையை ஏற் போம். இந்தியன் என்கிற உணர்ச்சியை ஏற்போம். உண்மையாக ஏற்போம். உறுதியாக ஏற்போம். நம் மூச்சாக ஏற்போம். பேச்சாக ஏற்போம். செயலாக ஏற்போம். முன்னேற்றப் பாதையில்வெற்றிப் பாதையில் விரைவோம் வாரீர்.