பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 டோம். எக்காலும் மலைக்கமாட்டோம் என்று எக்காளமிடுகிறீர்களா? மலையதிர முழங்குகிறீர் க்ளா? நன்று, நன்று உம் பேராண்மை. இந்தியம் வளர்க. இந்திய்ம் வெல்க. இந்தியம் விழுதுவிட்டுப் பரவுக. தடைமலைகளை ஏறியும் வெல்வோம் : வளைத்துப் பிடித்தும் வெல்வோம். ஏன்? வெற்றிற்கு வழிகள் பலப்பல. * அத்தனைக்கும் அடிப்படை, தன்வலிமை. வற்ருது ஊறும் தன்வலிமை. இறைக்க இறைக்க வற்ருது ஊறும் தன்வலிமை. காலமெல்லாம் வற்ருது ஊறும் தன்வலிமை. * = அத்தகைய தன்வலிமையைப் பெறவேண்டும் தம்பீ! 'எனக்கு வேண்டாவா அண்ணு? என்று நீ கேட்பது, காதில் விழுகிறது தங்காய். உனக்குந் தான், தன்வலிமை தேவை தங்காய். தன்வலிமையே, தன்னினைவிற்கு வேர். தன் னினைவே, தன்னுரிமைக் கனிமரம். எனவே, தன் வலிமையை வளர்த்துக் கொள்வோம். வாரீர், ஒவ்வொரு ஆணும் வளர்த்துக் கொள்வோம். ஒவ்வொரு பெண்ணும் வளர்த்துக் கொள்வோம். தன்வலிமைக்கு வழியென்ன? உழைப்பே. உழைப்பே விளைவு; உழைப்பே பொருள்; உழைப்பே செல்வம்: உழைப்பே உலகம். ஆதியான உழைப்பைப் போற்றுவோம். உழைப்பை - மேற்கொள்வோம். எ த் த ைக ய உழைப்பை மேற்கொள்ளுவோம்? ஆக்க உழைப்பை மேற்கொள் தம்பீ. ஆணை யிடும் அலுவலே வாழ்வு என்று ஏமாற வேண்டாம் தங்காய்.