பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திர ஒலிகள் என்னருமைத் தம்பி, தங்காய்! நீயும் நானும் கேட்கும் உரைகள் கோடி கோடி. நாள்தோறும் நம் காதில் விழும் உரை களோ பலப்பல. ஆயினும் நினைவில் நிற்பவை எங்கோ ஒன்று! பதியிைரத்தில் ஒன்றே பல்லாண்டு பசுமையாக நிற்கும். அப்படிப்பட்ட உரைகளில் சில என் செவிகளில் விழும் பேறுபெற்றேன். அவற்றை உங்களுக்கும் வழங்கட்டுமா? இன்று நேற்றல்ல, சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அல்ல. பல ஆண்டுகளுக்கு முன், நாற்பது ஆண்டுகளுக்கு முன் அறவுரை ஒன்று கேட்டேன். அது, இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்படியே வலிமை குறையாமல் ஒலித்துக் கொண் டிருக்கிறது. நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் நான், புகழுடைய, வரலாற்றுப் புகழுடைய காஞ்சீபுரத் தில் குடியிருந்தேன். யு. எப். சி. எம். உயர்நிலைப் பள்ளியில்-இன்று ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி யென்று அழைக்கப்படும் அதே பள்ளியில்ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். என் வகுப்பு நண்பரொருவர் புத்தம் புதிய சைக்கிள் ஒன்று வாங்கினர். அடுத்த ஞாயிற்றுக் கிழமை, அதில் ஏறி பல தெருக்களையும் சுற்றி வந்தார். வழியில், பெரிய காஞ்சீபுரம், நெல்லுக் காரத் தெருவிலிருந்த என் வீட்டிற்கு வந்தார். என்னைப் பின்னல் ஏற்றிக்கொண்டார். நான்கு அரச வீதிகளையும் சுற்றி வந்தார். நான், பின்னல் நின்றுகொண்டே உலாவந்தேன். உழைக்காமல் மகிழ்ச்சி பெற்றேன்.