பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எல்லோரும் வாழ்வோம்

என்னருமைத் தம்பிகளே, தங்கைகளே ! உங்கள் அனைவருக்கும் என் அன்பில் தோய்ந்த நல்வாழ்த்துகள். ஆர்வம் பொங்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள்.

நீங்கள் வாழுங்கள் ! புல்லாண்டு வாழுங்கள். நலத்தோடு வாழுங்கள். நந்நலத்தோடு வாழுங்கள். உடல் நலத்தோடு வாழுங்கள்.

அறிவு நலத்தோடு வாழ்க. எத்தகைய அறிவு நலத்தோடு? காலமெல்லாம் வளரும் அறிவு நலத்தோடு.

குணநலத்தோடு வாழ்க. எத்தகைய குண நலத்தோடு? கறைபடாத குணநலத்தோடு வாழ்க. குணமென்னும் குன்றேறி நின்று வாழ்க.

மனை நலத்தோடு வாழ்க. எத்தகைய மனை நலத்தோடு? அன்பும் அறனும் நிறைந்த மனை நலத்தோடு வாழ்க. அறச் செயல்களுக்கும் அருட் பணிகளுக்கும் கைகொடுக்கும் வாழ்க்கைத்துணை நலத்தோடு வாழ்க.

அங்கோர் சோலை; அதைச் சுற்றிப் பெரும்பாலை. சோலை, வழிப்போக்கருக்கு ஆறுதல்; பாலையோ வாழ்வோருக்குத் துன்பம். வாழையடி வாழையாக அக்கம்பக்கத்தில் வாழ்வோருக்குத் துன்பம். மாறாக நாடெல்லாம் சோலை; யாவருக்கும் நன்மை.

”நாடெங்கும் வாழக் கேடொன்றுமில்லை - இது நம் முன்னேர் உணர்ந்தது. எந்த முன்னேர்? இருந்து. இறந்த முன்னேரா? அல்ல. வாழ்ந்து, சிறந்த முன்னோர் உரைத்தது.

ஏன் உரைத்தனர்? எதன் பொருட்டு உரைத்தனர்? தற்சிறப்பிற்காகவா? இல்லை. அவரிடமும்