பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பிந்திய ஆண்டுகளில் வருகிருேம் என்று உரைத் தார். ஆகட்டும் என்றேன். மனநிறைவோடு சென் ருர் சட்டப்படி நடக்கிறது என்று என் அலு வலகத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி. - மூன்று படிவங்களோடு தொடங்கிய அப் பள்ளி, பின்னர் முழு உயர்நிலைப்பள்ளியாகி நன் முறையில் நடந்து வருகிறது. வேண்டியவர் என்பதற்கு அடையாளமே சலுகைகள். செல்வாக்கு என்பதற்கு அடையாளமே விதிசளுக்கு விலக்கு என்கிற கலிகாலத்தில், வேண்டியவர்களே முதலில் விதிகளுக்குக் கட்டுப் படவேண்டும் என்று நெறிப்படுத்தின நேர்மை யாளரின் வாய்மையுரை, இன்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அதே வலிமையோடு பன்னி ரண்டு ஆண்டுகளாக ஒலித்து கொண்டேயிருக்கிறது. அதுவே என் மனச்சான்று. 1955ஆம் ஆண்டின் முற்பகுதி. நானே பொதுக் கல்வி இயக்குனராகிப் பணிபுரிந்தேன். ஒரு நாள், பெரியவர் ஒருவர் என்னைப் ப்ேட்டி கண்டார். உயர்நிலைப்பள்ளி விவகாரம் ஒன்றைப் பற்றிய மனுவொன்றை என்னிடம் கொடுத்தார். 'இது மனுவின் நகல், மூலத்தைக் கனம் காமராசரிடம் கொடுத்திருக்கிறேன். அவரோடு இளமைதொட்டு எனக்கு நெருங்கிய தொடர் புண்டு. அதல்ை அவரிடம் கொடுக்க நேர்ந்தது. இதைக் கவனித்து ஆவன செய்யுங்கன். அவரும் இதுபற்றி உங்களிட்ம் பேசுவார் என்று கிறி விட்டுச் சென்ருர் வந்த பெரியவருக்கும், கனம் காமராசருக்கும் பல்லாண்டு பழக்கம். நெருக்கமான பழக்கம் என்பது உலகறிந்த செய்தி. யானும் அறிந்ததே.