பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 களா? கல்லூரிக்கு இலாயக்கானவர்களாகப் பார்த் துப் பிரித்து மேலே அனுப்பக்கூடாதா? இவ் வச்சங்கள் பலருடைய உள்ளத்தில் எழுகின்றன. கல்லூரிக் கல்விக்குத் தகுதியானவர்கள் சிலர்: உயர்நிலைப்பள்ளிக்கு ஏற்றவர்கள் பலர். தொடக்க நிலையோடு நிற்க வேண்டியவர்கள் மற்றவர்' என்பது, உயர்நிலைப்பள்ளி தேறிய மாணவர்களைப் போக்குப் பிரிவு செய்வது கேடானமுறை; மக்களை யும் நாட்டையும் நலியச் செய்யும் முறை. இத் தவருண கொள்கையையும் முறையையும் பின்பற்றும் எந் நாடும் இனி போதிய அளவு வளராது. இவ்விரண்டையும் துாக்கியெறிந்து விட்டு, எல்லோர்க்கும் எல்லா நிலைக் கல்வி மடையையும் திறந்துவிட்ட நாடே, இன்று சந்திரனில் விண் வெளிக் கப்பலை பத்திரமாக இறக்குவதில் வெற்றி பெற்று விட்டது. சோவியத் ஒன்றியம், விஞ்ஞானத் துறையில், பல முதல் வெற்றிகளை அடைந்ததற்கு, இனியும் அடையப்போவதற்கு உயிர் நாடி எது? கல்வி, கல்வி, மேலும் கல்வி. எந் நிலையில் விட்டா லும் எவ் வயதில் வேண்டுமானலும் மேலும் மேலும் கல்வி என்கிற நிலை, நிலைபெற்று விட்டதே. கல்லூரிக் கல்வி, சிலருக்கே பொருந்தும் என்கிற கூச்சலைக்கண்டு மிரண்டு விடாதீர்கள் உடன் பிறந்தோரே! மதி நுட்பம்’ என்பது, பிறவிக்கூறு ஒரு பங்கு; முயற்சியின் விளைவு தொள்ளாயிரத்துத் தொண்ணுற்று ஒன்பது பங்கு' என்பது வாக்குக்காக ஊக்கமூட்டும் அரசியல் வாதியின் ஒலியல்ல. விஞ்ஞான மேதை ஒருவரின் ஆராய்ச்சியின் முடிவு. சென்ற நூற்ருண்டிலேயே ரஷ்ய விஞ்ஞானி .ெ ச. சி ே ைவ், ஆழ்ந்து,