பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு வென்றது என்னருமைத் தம்பி, தங்காய்! கனவுகள் நனவாகின்றன. எல்லாக் கனவு களுமா? இல்லை. எல்லோருடைய கனவுகளுமா? இல்லை. சிற்சில கனவுகள், சிலருடைய கனவுகள் வெற்றி பெறுகின்றன. உங்கள் கனவுகளும் அப்படி வெற்றிபெற வழிவகை என்ன? பலப்பல கனவு களாக் இல்லாமை முதல் வழி; இன்று ஒரு கனவு, நாளைக்கு ஒரு புதுக் கனவு; இப்படி மறந்து மறந்து போகிற கனவுகள் மறைந்தும் போகும். அவை முளைக்கா, வேரூன்ரு வளரா, பலிக்கா. எனவே நம் வாழ்க்கைக் கனவுகள் புதர்களாகாதிருப்பதாக. இரண்டொன்ருக இருப்பதாக, ஒருபோது ஒரு கன வாக இருப்பதாக அது பலிக்கும்வரை வேறு கனவுகள் வந்து முந்தியதைப் புதைத்து விடா திருப்பதாக. அக் கனவு எத்தன்மையதாக இருக்க வேண்டும்? அது உயரியதாக இருக்கட்டும். நன்மை தருவதாக இருக்கட்டும். புதராக இல்லாமல், தனிமையாகவே வரும் கனவும் தானே நனவாகி விடாது. உயரிய, நன்மையான கனவும் தானே பலிப்பதில்லை. அதற்குப் போதிய முயற்சி வேண்டும். தொடர்ந்து முயற்சி வேண்டும். ஒருமுகமான முயற்சி வேண்டும். முயற்சி மட்டும் போதுமா? போதாது. ஏற்ற சூழ்நிலையும் தேவை. காற்றிலேறி விண்ணிலே சாடுதல், கவிஞனின் கற்பனை' என்று ஒதுக்கிய காலம் அன்று; இன்ருே இது சாதனையாகி விட்டது. நில மண்டலத்தி லிருந்து, நிலாமண்டலத்திற்குச் செல்லுதல் என்ற கருத்தே பித்தனின் பித்ற்றலாகத் தோன்றிற்று.