பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/7

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7

வாழ்ந்து சிறந்த நம் முன்னேர் வேண்டுவது யாது? வணக்கமா? வாழ்த்துரையா? பாராட்டா? போற்றுதலா? அல்ல; அல்ல; இவற்றுள் யாதுமன்று. இவை சிறியன; எளியன. அப்படியாயின் அவர்கள் வேண்டுவது என்ன? அவர்கள் விரும்புவது பெரியதை அரியதை; அது எது? அது வழிபடுதல்: அவர்களது நல்லுரையைப் பின்பற்றி நல்வழிப் படுதல்; அவர்களைப் பின்பற்றுதல்; அவர்களது சிறப்புகளைத் தேடுதல்; முயன்று, முயன்று அவற்றைப் பெறுதல்; பயின்று, பயின்று அவர்களது நல்வழி நடத்தல்: அன்புவழி நடத்தல்; அறவழி நடத்தல்: அருள்வழி நடத்தல்: ஒருமைவழி நடத்தல்; பொறுமைவழி நடத்தல்: பெருமைவழி நடத்தல்; இதுவே தேவை. எனவே, மேலளவு வணக்கத்தைக் குறைப்போம். உள்ளுணர்ந்து வழி படக் கற்போம். முன்னோர்க்குரிய கடமையை ஆற்றுவோம்.

இச் சுதந்திர நன்னாளிலே இத் தெளிவைப் பெறுங்கள். உறுதி பூணுங்கள். தொண்டாம் பயணத்தைத் தொடங்குங்கள்.

இதோ என்னுடைய காணிக்கை: ’நீங்கள் வாழுங்கள். இந்தியா வாழ்க: உலகம் வாழ்க.."

இதோ ஊக்க ஒலி: களைப்பைப் போக்கும் ஊக்க ஒலி, ஆர்வமூட்டும் ஊக்க ஒலி; இலட்சியத்தை நினைவுபடுத்தும் ஊக்க ஒலி.

எல்லோரும் வாழ்வோம் 'நன்றாக வாழ்வோம் ஒன்றாக வாழ்வோம்

இதயத்தின் அடியிலிருந்து ஒலிக்கட்டும் இம் மூவொலிகளும். எங்கும் ஒலிக்கட்டும் இவ்வொலி, என்றும் ஒலிக்கட்டும் இவ்வொலி.